
இந்த உலகத்தை சாமானியன் காண்பதற்கும், இலக்கிய மனம் கொண்ட படைப்பாளி காண்பதற்கும் பெரும் வித்தியாசம் உண்டு. ரசனையும் நுண்ணுணர்வும் கொண்ட படைப்பாளி வெறும் புறவயக் காட்சிகளை மட்டும் காண்பதில்லை. அக்காட்சிகளின் ஊடே அகத்தையும் ஊடுருவியே அவனது அவதானிப்பு அமைகிறது. தான் காணும் காட்சிகளை எதிர்காலவியலோடு நுணுகிப் பார்க்கும் சிந்தனையும் வரமென பெற்றவன் உண்மையான படைப்பாளி. ‘கைதிகள்…















