
கடந்த மாதம் முப்பத்தொன்பதாவது சென்னைப் புத்தக கண்காட்சிக்குச் சென்றபோது பேராசிரியர் வீ.அரசு அவர்களின் வீட்டிற்குச் செல்லும் அரியவாய்ப்பு கிட்டியது. அவரது வீட்டில் உள்ள நூலகத்தைப் பார்வையிட்டபோது “கண்காட்சியில் இந்தப் புத்தகத்தை மறக்காமல் வாங்குங்கள். உங்கள் ஊர்க்காரர் எழுதியது” என்று கூறி ஒரு புத்தகத்தைக் காண்பித்தார். அந்த நூலின் பெயர் ‘நாடு விட்டு நாடு’. தமிழினி பதிப்பகத்தின்…













