தோங் ஜியாவ் ஸோங் : மலேசிய சீனர்களின் வரலாற்றின் ஊடே ஓர் அறிமுகம்

மலேசியாவில் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து இயங்கி வரும் ‘தோங் ஜியாவ் ஸோங்’ என்பது மலேசிய சீனக் கல்வி இயக்கமாகும். இன்றும் இந்நாட்டில் நாம் தொடர்ந்து தாய்மொழிக் கல்வியைப் பெறுவதற்கான வாய்ப்பை நிலைநிறுத்திய அமைப்பு இதுவாகும். மலேசிய அரசியல் வரலாற்றில் மட்டுமின்றி மலேசியக் கல்வி வரலாற்றிலும் மிக முக்கியமானதோர் இயக்கமாக தோங் ஜியாவ் ஸோங் இயக்கம்…

நாகம்

பக்கிரி உள்ளே நுழைந்ததும் வீட்டிலிருந்த பக்தர்கள் ஒவ்வொருவராக வெளியேறத் தொடங்கினர். வந்து ஒருமாதம் ஆகவில்லை. அதற்குள் சாமியின் மனதில் இடம்பிடித்துவிட்ட பக்கிரியின்மேல் அவர்களுக்குக் கோபமும் பொறாமையும் ஏற்பட்டது. வெற்றிலை சிவப்பு உதடுவரை ஒழுகியிருந்தது. கால்களில் பலமிழந்தவனைப்போல சடாரென அமர்ந்தான். “நாகம் செத்துப்போனத சொல்லிட்டியா?” என்று கேட்கும்போது சாமியின் கைகள் படமெடுப்பதுபோல விரிந்து பின்னர் சுரத்தில்லாமல் விழுந்தது.…

மலேசியாவும் பழங்குடி கதைகளும்

“இந்தக் கதைகள்தான் எம்மக்களின் நூலகம் ஒவ்வொரு கதையிலும் ஏதாவது ஒரு முக்கியமான அல்லது ஈர்பான நிகழ்வு பதிவு செய்யப்பட்டுள்ளது. மனதில் வளப்பமாகிய வரலாற்றை இலைகளின்மீது நினைவகமாக்கியுள்ளது. கதைகள் எங்கள் வாழ்க்கை, அவை இன்னும் வாழ்கின்றன.”   கதைக்கூறல் எனும் வாய்வழி மரபை உணர்த்தும் இவ்வாசகம், உலகில் வாழும் ஒட்டுமொத்த பழங்குடி சமூகத்தின் ஒற்றைக் குரலாக வெளிபடுகிறது.…

ஜெயந்தி சங்கர் சிறுகதைகள் : மழையாகாத நீராவி!

மலேசிய, சிங்கப்பூர் பெண் படைப்பாளிகளில் மிக அதிகமாக தொடர்ந்து படைப்பிலக்கிய முயற்சிகளில் ஈடுபடுபவர் ஜெயந்தி சங்கர். மொழிபெயர்ப்புத் துறையில் இவரது பங்களிப்பு முக்கியமானது. அவரின் ‘மிதந்திடும் சுயப்பிரதிமைகள்’ நூலை முன்மாதிரியாகக்கொண்டு மலேசியாவில் ஒரு நூல் தொகுக்கப்பட வேண்டும் என நண்பர்களிடம் பரிந்துரைத்ததுண்டு. ஜெயமோகனின் ‘பொதுவழியில் பெரும்சலிப்பு’ எனும் அவரது சிறுகதைகள் குறித்த விமர்சனத்திற்குப்பின் தனது முக்கியமான…

நல்ல புழுதியும் நலம்கெட்ட வீணைகளும்

மலேசிய முகநூலர்கள் மத்தியில் அதிகமாக ஒரு காணொளி பகிரப்பட்டது. காரில் இருந்து அக்காணொளியை ஒளிப்பதிவு செய்திருந்தார்கள். தெருவில் நைந்து, கிழிந்து, அழுக்குப் படிந்த ஆடையுடன் மெலிந்த, நீண்ட செம்பட்டை முடியுடன் தளர்ந்திருக்கும் வயோதிகரிடம் காரில் இருந்தபடியே இளைஞர் ஒருவர் ஏதோ விசாரிக்கிறார். “இன்னும் பாட்டுப் பாடறீங்களா ?” “ஆமா பாடிகிட்டுதான் இருக்கேன்…” “ஓ… எங்க பாடறீங்க?”…

திறவுகோல் 9: வைகறைப் பூக்கள்

சிங்கை எழுத்தாளர் மா.இளங்கண்ணன் அவர்களால் எழுதப்பட்டு, தேசியக் கலைகள் மன்றத்தின் ஆதரவில் பதிக்கப்பட்டு 1990 ஆம் ஆண்டு வெளியாகி உள்ள இந்த வரலாற்றுப் புனைவு நாவல் 1941ஆம் ஆண்டு முதல் 1946 ஆம் ஆண்டு வரையிலான சிங்கப்பூரைக் களமாகக் கொண்டு புனையப்பட்டுள்ளது. பாலகிருஷ்ணன் என்ற தன் இயற்பெயரை இளங்கண்ணன் என்று மாற்றிக் கொண்ட நூலாசிரியரின் தனித்தமிழ்ப்…

மிஸ்ட் கால்

நீண்டு பிளந்த மீன்னல் கதவுகளின் ஊடாக வாரிப்பொழிந்து கொண்டிருந்தது வானம். வெளிச்ச நரைகள் படிந்த இருளின் அமைதி அந்த விமான நிலையத்தை முழுமையாக ஆக்கிரமித்துக்கிடந்தது. மாறி மாறி வந்திறங்கிய விமானங்களுக்குள் பெருமூச்செறியும் பலநூற்றுக்கணக்கான உயிர்களின் நிம்மதியினாலோ என்னவோ அந்த பெருவிதானம் தொடர்ந்து காற்றோட்டம் நிறைந்ததாகவே காணப்பட்டது. வாழ்வின் சகல அழுக்குகளையும் அகத்தில் சுமந்த ஒருவனையும் மீதி…

கதைபோடுகிறாள் கனிப்பெண்

ஒரு சிறுகதையை எழுதி முடித்தவுடன் ஈராயிரம் ஆண்டுகளாய் தொலைந்து வரும் கதை இழையைக் கண்டுபிடித்துவிடுகிறது. புராதனக் கதை இழைகள் மறதியில் காணாமல் போய்த்தான் இருக்கும். ஒரு நகரம் பாழடைந்து ஜனங்கள் வெளியேறிச் செல்கிற கதைகள் உண்டு. எல்லா ஊரிலும் பஞ்சம் ஏற்பட்டு மாடுகளும் மனிதர்களைப்போல் எலும்பு துருத்திய காலத்தில் இந்தியாவைவிட்டு தமிழக கிராமங்களைவிட்டு வெளியேறிய ஜனங்களின்…

வடக்கு நோக்கி பறந்ததொரு மாயப்பறவை

வல்லினம் கலை இலக்கிய விழா முடிந்ததும் வழக்கம் போலவே நான் பரபரப்பானேன். எல்லாம் குறித்த நேரத்தில் ரயிலை பிடிக்க வேண்டுமே என்கிற பரபரப்புதான். இந்த முறை எழுத்தாளர் கோணங்கியையும் உடன் அழைத்துச் செல்வதால் படபடப்பு அதிகம் இருந்தது. இரண்டு நாட்கள் வடக்கு மாநிலங்களை அவருக்குச் சுற்றிக் காட்ட திட்டமிட்டிருந்தோம். ஆகவே நிகழ்ச்சி முடிந்ததும் கோணங்கியிடம் என்னை…

மேஜிக் பையுடன் சுண்ணாம்பு மலை திருடன்!

15.9.2017 – வெள்ளி வழக்கம்போல தயாஜியும் நானும்தான் விமான நிலையத்தில் எழுத்தாளர் கோணங்கிக்காகக் காத்திருந்தோம். முதல் சந்திப்புதான். ஆனால் எளிதாக அடையாளம் காண முடிந்தது. ஐந்து மணிக்குள் சாலை நெரிசலாகும் பகுதிகளைக் கடந்துவிட வேண்டுமென அவசர நல விசாரிப்புகளுடன் காரை அடைந்தோம். தயாஜி காரில் காந்திருந்தார். காரிலேயே ‘வல்லினம் 100’ புத்தகத்தைக் கொடுத்தேன். பொதுவாக ‘வல்லினம்’…

வல்லினம் கலை இலக்கிய விழா 9 : ஒரு பார்வை

கடந்த 17.9.2017 (ஞாயிறு) கிராண்ட் பசிப்பிக் தங்கும் விடுதியில் வல்லினம் குழுவினரின் வருடாந்திர நிகழ்ச்சியான கலை இலக்கிய விழா ஒன்பதாவது ஆண்டாக நடைபெற்றது. சரியாகப் பிற்பகல் 2.00க்குத் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் 280க்கும் மேற்பட்ட இலக்கிய ஆர்வலர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சிக்கென தமிழகத்திலிருந்து சிறப்பு வருகை புரிந்த எழுத்தாளர் கோணங்கியுடன் சிங்கையிலிருந்தும் பல இலக்கிய ஆர்வலர்கள் பங்கேற்றனர்.…

வல்லினம் 100- மலேசிய சிங்கை எழுத்தியக்கத்தின் நவீனக் குரல்

வல்லினம் 100 நிகழ்ச்சிக்குப் போவதற்குத் தயாராகத்தான் இருந்தேன்.  ரயில் டிக்கெட்டை இன்னும் ஒரு வாரம் கழித்து எடுத்துக் கொள்ளலாம் என்றிருந்தேன். அதற்கு முன்னாலேயே  வல்லின நிகழ்ச்சி தேதியிலேயே என் நெருங்கிய உறவுப்பையனுக்குப் பதிவுத் திருமணம்  என் திட்டத்தைப் பாழாக்கிவிட்டது. ஒரு இலக்கிய மனம் அதனைத்  தவிர்த்திருக்கலாம். ஆனால் வீட்டில் பெரிய மனுஷன் தகுதி இது போன்ற…

வல்லினம் 100 சிறுகதைகள் – ஒரு பார்வை

“எனது கதைகள் விமர்சகர்களின் அளவுகோல்களுக்குள் அடங்காதவை. என் கதைகளின் அருகில் அளவுகோல்களை வைப்பதன் மூலம், அவர்கள் என் கதையை அளக்கவில்லை. அவர்களின் அளவுகோல்களை அளந்துகொள்கிறார்கள்.” சொன்னது புதுமைப்பித்தன். அவர் சொன்னது என்னுள் உண்டாக்கிய தயக்கத்துடன் வல்லினம் 100 தொகுப்பில் இடம்பெற்ற 11 சிறுகதைகளைப் பற்றி எழுதுகிறேன். வாழ்வில் பல தருணங்களை, பல விதமான மக்களை, இடங்களை,…