சிட்னியின் மீதான காதல்

எனக்கு ஆங்கில நாவல்கள் மேல் ஒரு  காதல் உண்டு. பல நாள்கள் கண் விழித்து படிக்கிற நிலையிலான ஒரு காதல். அந்தக் காதல் ஏன் வந்தது என பலமுறை யோசித்திருக்கிறேன். ஆறு ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட காதல் அது என சரியாகக் கணக்கிடலாம். மிக முக்கியமாக அதை சிட்னியின் மீதான காதலாக நான் கருதுகிறேன். யார்…

பிணை

ஞாயித்துக்கெழம முடிஞ்சி திங்கக்கெழம ஆச்சுன்னா எதாச்சும் ஒரு ஏழறையோடதான் ஆரம்பிக்குது என் பொழப்பு. ஊர்லருந்து வந்தமா ஒழுக்கமா வேல செஞ்சி பொழப்பமான்னு இல்லாம ஒனக்கு என்னா குடி வேண்டி கெடக்குது? வாரம் முழுக்க வேல செய்றேல்ல, ஒழுங்கா மூடிகிட்டு தூங்க வேண்டியதுதான, ஊர்ல ஆத்தா, அப்பன் கஸ்டபடறாங்க, தங்கச்சி, தம்பிகள கரையேத்தனும்னு சொல்லிதான வந்த? அதுக்குதான…

டிலீப் டிடியே

பெயர்: டிலீப்  டிடியே பிறப்பு: நோர்மண்டி தொழில்: பல்கலைக்கழக மாணவன் அப்பா பெயர்: டிடியே பிரான்சுவா தொழில்: மருத்துவர் அம்மா பெயர்: மைதிலி தம்பிப்பிள்ளை                                                                                         *** ஓர் இளவேனிற்காலச் செக்கல் பொழுதில் நோர்மண்டி மத்திய தொடருந்து  நிலையத்தில் திலீப்  டிடியே-யை இறக்கி விட்டு அந்த தொடரூந்து தனது பயணத்தைக் தொடர்ந்தது. டிலீப்  பாரிஸ் சோர்பேண்…

கல்லறை

சின்னச் சின்ன மனிதக் கூடுகள் நிறைந்த காங்கிரீட் அடுக்குகள்.  இருபது அடுக்குகளுக்குள் நூற்றுக்கும் குறையாத பத்துக்குப் பதினைந்து கூடுகள். மனிதப் புழக்கத்திற்கும் குறைந்தபட்ச இடைவெளிக்கும் சாத்தியப்படாத நெரிசல். அது அது, அதனதன் கூட்டுக்குள் முடங்கி, நொந்து நூலாகிக் கிடக்கும் வானந்துச் சிறை அது. தரையில், மண்ணோடு கலந்து வாழும் சுகத்தை  இழந்த மானுடப்பறவைகளின், சோகம் இழையும்…

வழித்துணை

விடியலை, அகண்ட வாசலில் நின்று வரவேற்ற கருக்கல். மென் பூச்சாய், இருளுள் படர்ந்து விரியும் ஒளி இழைகளின் ஊடாய், மெல்லச் சிவக்கும் அடிவானம். நீண்டுகிடக்கும் மென் இருளடர்ந்த சாலை. பகல்நேர வெயிலின் உக்கிரமோ ஆர்ப்பரிப்போ குழப்பமோ வாகனப் புகை நெடியோ ஜன சந்தடியோ ஏதுமில்லாமல் – ஒரு அகண்டு விரிந்த கோயில் பிரகாரத்தின் நுழைவாயிலில் தரிசனம்…

“எளிய வாசிப்புத்தளத்தைத் திருப்திப்படுத்த நகர்த்தப்படும் எழுத்து நீர்த்துப்போவதை தவிர்க்கவியலாது” – சீ.முத்துசாமி

சீ.முத்துசாமி 1949-ஆம் ஆண்டு மலேசியாவின் கெடா மாநிலத்தில் அமரர்களான சீரங்கன் முத்தம்மாள் தம்பதிகளின் மூத்தமகனாகப் பிறந்தார். 1973 முதல் இலக்கிய ஈடுபாடு கொண்டு சிறுகதைகளும், குறுநாவல்களும், நாவல்களும் எழுதி வருகிறார். இவர் படைப்புகள் மலேசியாவில் தனித்துவமான எழுத்து பாணியைக்கொண்டவை என்பதோடு பல்வேறு விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றிருக்கின்றன. குறிப்பாக இவரது ’இரைகள்’ சிறுகதை, தமிழகத்தின் குமுதம் இதழின்…

தோட்டப்புற வாழ்க்கைப் போராட்டங்களைப் பேசும் கதைகள்

பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ் நாட்டிலிருந்து சன்னஞ் சன்னமாய் கங்காணி திட்டத்தின் மூலம் சஞ்சிக்கூலிகளாக மலாயாவுக்குக் கொண்டுவரப்பட்டவர்களின் துயரங்கள் இன்னல்களை நம் எழுத்தாளர்கள் பல சிறுகதைகளில் பதிவு செய்திருக்கிறார்கள். மலாயாவின் முதல் சிறுகதை சிங்கப்பூரிலிருந்து சேது மகதூம் சாய்பு எழுதியதாக ஒரு பதிவு சொல்கிறது. அதனையே முதல் புள்ளியாக நாம் எடுத்துக் கொண்டாலும்,  1930 வெ.…

க்ளிங் க்ளிங் பெண்

அந்த மாலை, வாசற்படியில் அமர்ந்தபடி வெளிநோக்கி செம்மண் சாலையையும் திரும்பி அம்மாவின் முகத்தையும் பார்த்துக் கொண்டிருக்கும்போதுதான் சுமதி அந்த முடிவுக்கு வந்திருந்தாள். அவள் அம்மாவைப்போல் இருக்கப் போவதில்லை. ஒருபோதும் நெற்றியில் பொட்டு வைத்துக்கொள்ள போவதில்லை. அம்மாவைப்போல் கணவனின் வருகையை எதிர்பார்த்து முட்டாள்தனமாகக் காத்துக்கொண்டிருக்கப் போவதில்லை; அவன் தன்னிடம் திரும்பி வந்துவிடுவான், குடும்பத்துடன் சேர்ந்துவிடுவான் என்று நம்பி…

சாம்ராஜ்யம்

மடங்கின வாக்கில் இருக்கும் பாட்டியின் கைகள் என்னை எட்டிப்பிடிக்கும் வேகத்தில் நீண்டன. நல்லவேளை. அம்மா எப்படி மெனக்கெட்டும் என் தலைமுடி நீண்ட சடை போடும் அளவுக்கு வளராமலேயே இருந்தது. இல்லையென்றால் மரக்கிளையில் மாட்டிக்கொண்ட கொம்புமான் போன்று என் சடை பாட்டியின் கையில் சிக்கியிருக்கும். பாட்டியைக் கொம்புமானைத் துரத்திவந்த சிறுத்தைப் புலியாக நினைத்துப் பார்த்தேன். அந்த வேளையிலும்…

நகர்வு

பிபிஆர் பிளட்சின் 15-வது மாடியில் உள்ள 10-ம் நம்பர் வீட்டில் ஒரே சத்தமும் சண்டையுமாக இருந்தது. வீட்டின் உள்ளே இருந்து ஒருஆண் குரல் பலமாக கத்திக் கொண்டிருந்தது. சண்டை நடந்து கொண்டிருக்கும் வாசற்படியை மலாய்கார குடும்பம் ஒன்று அமைதியாக கடந்து போனது. கீழ் மாடியில் குடியிருக்கும் சாந்தி சத்தம் கேட்டு வேகவேகமாக படியேறி மேலே வந்தாள்.…

பார்ச்: தரிசும் தாகமும்

கடுமையான ஆணாதிக்க வாழ்க்கை முறையை அனுபவித்து வரும் கிராமத்துப் பெண்கள், அவர்களின் ஆசா பாசங்களை சக   தோழிகளுடன் பகிர்ந்து கொண்டு எப்படிச்  சிரிக்கவும் முடிகிறது என்று தனக்குள் எழுந்த ஆச்சரிய உந்துதலே இயக்குனர் லீனா யாதவின் பார்ச் திரைப்படத்தின் உருவாக்கம். படத்தின் ஆரம்பத்தில் வரும் எழுத்தோட்டத்தில்  இயக்குனர், அவரிடம் தங்களின் வாழ்க்கை குறித்தத்  தகவல்களை நேர்மையாகப்…