திறவுகோல் 3: குருவிக் கோட்டம்

2014 ஆம் ஆண்டு, அங் மோ கியோ நூலகத்திற்குச் சென்றிருந்தபோது ஒரு காட்சி என்னைக் கவர்ந்திழுத்தது. வட்ட வடிவ வெள்ளை நிற மேசை ஒன்றின் நடுவில் பறவைக் கூடு ஒன்று முட்டைகளோடு அமைக்கப்பட்டு அதைச் சுற்றி பலவிதமான காகிதப் பறவைகள் உருவாக்கப்பட்டிருந்தன. சில காகிதப் பறவைகள் மேசைக்கு மேலே பறக்குமாறு செய்யப்பட்டிருந்தன. முழுவதும் வெண்மையாகக் காட்சி…

வாழ்வதின் பொருட்டு : உலகமயமாக்கலும் புலம் பெயர்ந்தோர் எழுதிய நாவல்களும்

‘வெஞ்சின வேந்தன் பகை அலைக் கலங்கி வாழ்வோர் போகிய பேர் ஊர்ப் பாழ் காத்திருந்த தனி மகன் போன்றே’ நற்றிணை – 153. தனிமகனார். பலநாடுகளில் நிகழ்ந்த உள்நாட்டுக் கலவரங்கள், இன அழித்தொழிப்புகள், போர், அரசியல் காரணங்கள், கல்வி, வேலைவாய்ப்பு போன்ற காரணங்கள் மட்டுமே புலம்பெயர்தலை உலகமயமாக்கலை ஏற்படுத்தியது என்று கூற முடியாது. இரண்டாம் உலகப்போருக்குப்…

வல்லினம் போட்டி சிறுகதைகள்- ஒரு பார்வை

எட்டாவது வல்லினம் கலை இலக்கிய விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டிக்கு மொத்தம் 137 கதைகள் வந்திருந்தன. பழையவர்கள், புதியவர்கள் என்று பலரும் இப்போட்டியில் முனைப்புடன் கலந்து கொண்டிருந்தனர். கதைகளை அஞ்சலிலும் மின்னஞ்சலிலும் அனுப்பியிருந்தனர்.  எல்லா கதைகளையும் தொகுத்து  படைப்பாளர் பெயரினை நீக்கி எண்ணென்று பேரிட்டு வாசிக்கத் தொடங்கினோம். முதல் சுற்று வாசிப்பில் கதையாக இருந்த…

பொட்டலம்

உள் நுழைந்ததும் வலது பக்கமாக பார்த்துப் போவீர்களேயென்றால் படிகள் தென்படும். முதல் மாடிக்குச் செல்லுங்கள். இரண்டாம் மாடி மூன்றாம் மாடி என்று ஏதுமில்லை. முதல் மாடி மட்டும்தான். வலதுபக்கமாகத் திரும்புங்கள். நேராகச்சென்று மறுபடியும் திரும்புவீர்களென்றால் நான்கைந்து விதமான உணவருந்தும் இருக்கைகள் இருக்கும். இரு மருங்கிலும் காணலாம். வலது பக்கத் தொடக்கத்திலேயே வெண்ணிறப் பிரம்பு நாற்காலிகள் உண்டா,…

நீயின்றி அமையாது உலகு 9

பலவித நாகங்களுக்கு நடுவில் நான் மட்டும். என் இரு கைகளையும் இறுக்கப்பிடித்த மலைப்பாம்புகள் ஆளுக்கு ஒருபக்கம் என இழுத்தன. தப்பித்து ஓடிவிட முடியாதபடி கால்களை கருநீல நாகங்கள் ஒன்றன் பின் ஒன்றாகச் சூழ்ந்திருந்தன. சுற்று வளைத்துவிட்ட நாகங்களின் பளபளத்த மேனி கண்களைக் கூசியது. இருக்கும் இடைத்தைப்பற்றியோ கிடக்கும் நிலை பற்றியோ என்னால் முழுமையாக சிந்திக்க முடியவில்லை.…

வலி அறிதல் (முதல் பரிசு)

அப்பாவுக்கு எம்ஜியாரை அவ்வளவாக பிடிக்காது. “நல்லா கவனி, அப்படியே தூணு பின்னால ஒளிஞ்சிகிட்டே கண்ணக் கசக்குவான் பாரு..”, என்று எள்ளல் தொனிக்க சிரித்தபடியே அவர் அடிக்கடி சொல்லும் ஒற்றை வரியே எம்ஜியாரைப் பற்றிய அப்பாவின் பரிகாசம் கலந்த விமரிசனமாக பெரும்பாலும் இருந்து வந்திருக்கிறது. அவரின் வயதேயொத்த ராஜூ அங்கிள், பலராமன் மாமா போன்ற பலராலும்  “என்னாமா…

உப்பு (இரண்டாவது பரிசு)

நெற்றியின் வியர்வை  உதட்டை நெருங்க, முதுகிலுள்ள பள்ளிப்பை கனத்தினால் கால்கள் வலித்தன. இதயத்துடிப்பு சற்று அதிகமாக இருந்தாலும் ஏனோ கால்கள் அந்த இடத்தைவிட்டு நகர சம்மதிக்கவில்லை. எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு அங்கேயே நின்று கொண்டிருந்தேன். வழக்கம்போல் ஏங்கி இருந்த கண்கள் கண்ணாடிப்பேழையை மட்டும் உற்று பார்த்துக் கொண்டிருந்தன. மரியாதை தெரியாத வெள்ளைத்தோல் ஆடவன் ஒருவன், அவன் காரசாரமான…

குளத்தில் முதலைகள் (மூன்றாவது பரிசு)

நடு இரவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது காலம். சாலை ஓரத்தில் தெரு விளக்கின் கீழ் இரு மோட்டார் சைக்கிள்கள் நின்றுகொண்டிருந்தன. அந்த மோட்டார் சைக்கிளில் 30 வயது எட்டி இருக்கும் இரு முரட்டு ஆசாமிகள் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களது பேச்சின் எந்த வார்த்தையும் ஒழுக்கம் நிறைந்த மனிதர்களாகக் காட்டவில்லை. அந்த இரண்டு பேரில், ஒருவனின் போன்…

காதல்மொழி நானூறு – அகநானூற்றுப் பாடல்கள் – 8

பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கையில்தான் முதல் காதல் கடிதம் எழுதினேன். ஒருவாரமாக யோசித்து யோசித்து ஒன்றும் சரிவராமல் இப்படி எழுதினேன். “நான் உன்னை நேசிக்கிறேன். விருப்பமெனில் திருப்பித்தா. இல்லையெனில் கிழித்து எறிந்துவிடு (ரொம்பதூரம் தள்ளி கீழே) குறிப்பு: இது என் இதயம். தயவுசெய்து கிழித்துவிடாதே”. இந்த கடிதத்தின் வரிகள் எல்லாமே இன்னொரு நண்பனின் உபயம். இந்தக்கடிதத்தில் ஒரு…

வாசகர் கடிதங்கள்

இருவரும் சூழலியல் கவிதையும் தேவதச்சன், நரன் இருவரின் கவிதைகள் உண்டாக்கும் பேருணர்வு (Phenomenalism) அபரிமிதமானது. மனம் சூன்யமாக உள்ள வேளையில் கவிதைகள் சிருஷ்டிக்கான புதிய வழிகளைத் திறந்து விடுகின்றன எனவும் கூறலாம். இவர்கள்தம் வரிகளை மனம் புணரும்போது ‘படிமம், வார்த்தைச் செருகல், அனுபவம், முடிவு’ போன்றன என்னவாகப் போகின்றது என்ற சிலாகிப்புத் தோன்றுவதுண்டு. தேவதச்சனின் “இரண்டாயிரம்…

கலை இலக்கிய விழா 8 : தொடங்கும் முன் சில வரிகள்.

‘வல்லினம்’ வருடம் தோறும் மேற்கொள்ளும் பல்வேறு கலை இலக்கிய முயற்சிகளின் முத்தாய்ப்பு தினமாகக் கலை இலக்கிய விழா கொண்டாடப்படுகிறது. 8ஆம் ஆண்டு கொண்டாட்டமான இவ்வருட நிகழ்ச்சி மிகக் கவனமாகத் திட்டமிடப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆளுமைகளும் ஆவணங்களும் மலேசிய நவீனத் தமிழ் இலக்கியத்திற்குப் பங்காற்றிய ஐவரை ஆவணப்படம் எடுப்பதென முடிவானபோது அப்பட்டியலில் மா.சண்முகசிவா, சீ.முத்துசாமி, அரு.சு.ஜீவானந்தன், சை.பீர்முகம்மது, கோ.புண்ணியவான்…

வதை ~ வாதை ~ வார்த்தை

~“சரியான பால்யம் கிடைக்காத எவரும் பிற்பாடு வார்த்தையையும்,         எழுத்துகளையும் பின்தொடர்கிறார்கள்…” ~ நரன் ( 1981 )  கவிஞர், சிறுகதை எழுத்தாளர். மூன்று கவிதைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன. சமீபத்தில் வெளியான  இவரின் “லாகிரி” கவிதைத் தொகுப்பு  சமகாலத் தமிழ் இலக்கியச் சூழலில் முக்கியமான கவனத்தைப் பெற்றுள்ளது. வெளிவந்து ஒரு மாத்திற்குள்ளாகவே அதிகமான பிரதிகள் விற்றுத் தீர்ந்துவிட்டதாகக் கூறும்…

லாகிரி தொகுப்பிலிருந்து சில கவிதைகள்

                                                           ~  நான்  ~   இடது தட்டினடியில் புளி ஒட்டப்பட்ட துலாக்கோல். இயேசுவின் இடது கன்னத்து முத்தம். தேயிலையில் கலக்கப்பட்ட மரத்தூள் கவனத்தைத் திசைதிருப்ப சாலையில் 10ரூபாயை வீசுபவன் கள்ளகாதலியை  விழாக்களில் தங்கையென அறிமுகம் செய்பவன் நிறைய பஞ்சடைக்கப்பட்ட பெண் மேல்ஆடை. கொத்தப் பாயும் நீர்பாம்பு. நிலப்பத்திரங்களின் கள்ளக் கையெழுத்து…….     ~…

போகன் சங்கர் கவிதைகள்

1 மனப்பதற்றத்தின் பழுப்பு தேவதைகள் மரங்களின் மேல் தயக்கமின்றி பறக்கின்றன மலைமேல் இரவுகளில் தெரியும் ஏக்கத்தின் வனத் தீ இனிப்புப்பெட்டிகளைத் திறக்க மறுக்கும் விரல்களோடு நீங்கள் எழுதும் கசப்புக் கவிதைகள் உடல்கள், உடல்களின்  சிறிய வாசல்களுடன் தேவாலயங்கள், கல்லறைகளின் தழும்பு மாறாத வரிசையுடன் நீங்கள் உங்கள் ஆரஞ்சுச் சாறுகளை  வெப்ப காலத்துக்காக வைத்திருங்கள் குளிர்காலங்களில் நான்…

தகவல் சுழற்சி (Information Cycle)

தகவல் தேடல் வேட்டையை எங்கிருந்து தொடங்குவது? தகவல்கள் உற்பத்தி செய்யப்படும் முறை, பகிரப்படும் விதம் மற்றும் தகவல்களில் ஏற்படக்கூடிய சாத்தியமான மாற்றங்களை விளக்குவதற்கு ‘தகவல் சுழற்சி’ என்ற சொற்பதம் பயன்படுத்தப்படுகிறது. செய்தியாக மாறக்கூடிய தன்மை உடைய நிகழ்வுகள் ஒவ்வொரு காலத்திலும் எவ்வாறான மாற்றங்களுக்கு உட்படுகிறது என்பதைப் புரிந்து கொள்வதன்மூலம் நமக்குத் தேவையான தகவல்களை அடையாளம் காணவும்…