
‘மெய் இன்று கண்டேனடா, முகமன்று போலின்றி நிறமாறிப் போனதை கண்டேனடா. சொல்லெல்லாம் எரிக்க எரிக்க உளமெல்லாம் கசக்க கசக்க நுதல் சுருங்கும் தருணமெல்லாம் கண்டேனடா! மா தவம் நீங்கிட வந்தேனடா! அயோத்தி வந்தேனடா!ஐயம் என்மேனி கண்டாயோடா! கொடுந்தீ சொல்லும் கேளடா’உச்சஸ்தாயில் சீதையின் குரல். சிவந்த கனலின் நிழல் போலசெந்துணிச்சுருளைகள் முன்னே படர, காந்தள் மலரின் இதழ்…