
ஒன்றாக செத்துப்போக முடிவு செய்ததும் அந்த புளோக்கின் பன்னிரண்டாம் மாடிக்குச் சென்று அங்கிருந்து குதித்து விடும் யோசனை தான் முதலில் வந்தது. இன்றைய சூழலில் ஆகச் சுலபமானது, ஆனால் சிறந்த முறையல்ல. அந்த வழியைத் தேர்ந்தெடுத்தவர்கள் ஏதோவொரு புள்ளியில் வாழ்க்கையின் மீது தீராத வெறுப்பைக் கொண்டிருந்தவர்கள். ஒருகணம் உச்சமேறிய அச்சமோ, கோபமோ, விரக்தியோ ஏதோவொன்று அந்தப்…