மாற்றமற்ற மாற்றங்களைப் பேசும் ‘மாறுதல்கள்’ நாவல்.

இலங்கையில் ஆங்கிலேயரால் அறிமுகம் செய்யப்பட்ட பெருந்தோட்ட பயிர்செய்கையில் ஈடுபட சுதேசி மக்கள் ஆர்வம் காட்டாததன் பின்னணியில் ஆள்கட்டிகள் என்று சொல்லப்படுகின்ற பெரியகங்காணிகளினால் கூலிகளாக தென்னிந்தியாவில் இருந்து கொத்து கொத்தாக கொண்டுவரப்பட்ட தமிழர்களை மலையகமெங்கும் குடியமர்த்தி இருநூறு வருடங்களை தொட்டிருக்கிறது. அதன் ஞாபகார்த்தமாக மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள், தனியார் அமைப்புக்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள் மற்றும் தனிமனித…

வல்லினத்தின் விமர்சன முகாம்: ஓர் அனுபவம்

வல்லினம் ஏற்பாட்டில் மார்ச் மாதம் 3 & 4-ஆம் திகதிகளில் களும்பாங்கில் உள்ள மை ஸ்கில் அறவாரிய வளாகத்தில் நடந்த ஓர் இலக்கிய நிகழ்வில் கலந்துகொண்டது மட்டுமல்லாமல் ஒரு கட்டுரையைச் சமர்ப்பிக்கும் நல்வாய்ப்பும் அமைந்தது.  நான், இது நாள் வரை எந்த இயக்கம் சார்ந்தும் இயங்காததால் இது எனக்கொரு புது அனுபவமாக இருந்தது. ஓர் இயக்கத்தின்…

மிருகம்

கோமதி என்ன சொல்கிறாள் என்பதே எனக்கு விளங்கவில்லை. அவள் கதறி அழுதபோது மூச்சுக்காற்று மிகையாகி ‘உய் உய்’ என்று கேட்டது. அவள் கோபமாக இருக்கிறாள் என்பது புரிந்தது. தனக்குத் தெரிந்த கெட்ட வார்த்தைகளை அழுகையினூடே கொட்டித் தீர்த்தாள். அப்படியானால் அவள் போப்பியைத்தான் திட்டுகிறாள். போப்பியிடம் என்னையும் என்னிடம் போப்பியையும் கெட்ட வார்த்தையில் திட்டுவது அவள் வழக்கம்.…

உடும்பு தோஷம்

முன்வாசல் கம்பி இடுக்கு வழி நுழைந்த உடும்பு ஒன்று, அவனது இரண்டு மாடி வீட்டின் முன்வாசல் கம்பிக்கும் கதவுக்கும் இடையில் மாட்டிக் கொண்ட பிறகுதான் எல்லாமே ஆரம்பமானது. ஒரு மீட்டர் அளவு வளர்ந்த பெரிய உடும்பு அது.  சொரசொரப்பான அதன் தோலும் வெளியே துருத்தி துருத்தி மறையும் நாக்கும் அருவருப்பாக இருந்தது. அந்தக் கம்பி இடுக்கு…

இ. ஆ. சி அல்லது ஆ. இ. சி

அந்தக் கதையின் போலிக் கதையை என்னால் எழுத முடியும். ஆனால், என்னதான் இருந்தாலும் போலி போலித்தானே. டேனியல் கிரேக் ‘ஜேம்ஸ் பாண்ட்’ திரையில் கட்டியிருக்கும் ஒமேகா கைக்கடிகாரத்தில் எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. அதன் தொடக்க விலை மலேசிய ரிங்கிட் முப்பதாயிரம். ஆனாலும், அந்த ஒமேகா கைக்கடிக்காரத்தை ‘மூடா டாட் காம்’ என்ற மலேசிய இணையச் சந்தையில்…

காலச்சக்கரம்

ஒரு நாள், பிரபல ஓவியரான ராஜா ரவிவர்மா சந்தையில் நடந்து சென்றார். ஒரு இளம் வயது பெண்மணி அவர் அருகில் ஓடி வந்து, “நான் உங்களின் மிகப் பெரிய ரசிகை. உங்கள் ஓவியங்களுக்கு நான் அடிமை,” எனச் சொல்கிறாள். அதற்கு ரவிவர்மா சிறு புன்னகையுடன் தலையை மட்டும் அசைக்கிறார். சற்றும் தாமதிக்காமல், அந்தப் பெண்மணி அவளின்…

யாத்வஷேம்: மானுட வதையின் உச்சம்

நான் ரப்பர் தோட்டத்தில் வாழ்ந்தபோது, என் அக்காள் வேலை செய்யும் ரப்பர் ஆலைக்குப் போவது வழக்கமாக இருந்தது. அக்காள் அங்கு ரப்பர் பாலை உறைய வைக்கும் பகுதியில் பணியில் இருப்பாள். ரப்பர் பாலில் போர்மிக் திராவகம் கலந்தால்தான் அது பதமாக உறையும். என் பால்ய வயதில் நான் தெரிந்துகொண்ட முதல் ரசாயனப் பொருள் போர்மிக் அமிலம்தான்.…

தேவனாம்பிய பியதசி

‘பௌத்தம் என்பது மாயமல்ல. அதை உங்கள் வாழ்வில் அனுமதித்த கணமே அற்புதங்கள் எதுவும் நிகழ்ந்து விடாது. நீங்கள் எந்தளவுக்கு அதன் சாரத்தை உள் வாங்குகிறீர்களோ அதற்கேற்ப உங்களிடம் மாற்றங்கள் நடக்கும். அதற்கு நானே சாட்சி’ ரூப்நாத்தில் கற்பாறையொன்றில் செதுக்கப்பட்டிருந்த கணவர் அசோகரின் செய்தியை வரிவரியாக வாசித்தார் ராணி வேதிதாதேவி. சமஸ்கிருதத்தோடு பாலியிலும் பிராகிருத மொழியிலும் அவருக்குப்…

பாபியின் தொழில் தர்மம்

“நம்மளாவது வாரத்துக்கு ஒரு வாட்டியாவது அவனுகளைப் பாக்குறோம். இந்த அர்த்தராத்திரில இப்பிடி ஒரு கூட்டம் முழிச்சுக்கிட்டு இருக்குறது அவனுகளுக்கு என்னைக்காவது தெரியுமா?” இப்போதுதான் கோயம்பேடு ரோகிணி தியேட்டரில் அவனுகளைப் பார்த்துவிட்டு வந்திருந்தார்கள் செந்திலும் பாபியும். அவனுகள் என்பது கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வெளியே உள்ள மனிதர்கள். “அவனுகளுக்கு ஏண்டா தெரியணும்? நம்ம தலையெழுத்து இங்க கிடந்து சாகணும்னு…”  என்றான் கொட்டாவியை…

ஒலியென எழுவது ஞானமே

மொழியைச் சுருதி எனச் சொல்லும் வழக்கம் நம் மரபில் உண்டு. கம்பராமாயணத்தில் சுருதி என்ற சொல் வேதத்தைச் சுட்டவும், மொழியைச் சுட்டவும் மாறி மாறி பயன்படுத்தப்பட்டுள்ளது. திருமூலர் ‘சுருதிச் சுடர்கண்டு சீற்ற மொழிந்து’ எனச் சுருதியைச் சொல் அல்லது ஒலி என்ற அர்த்தத்திலேயே பயன்படுத்துகிறார். சமஸ்கிருத அகராதியை உருவாக்கிய மேக்ஸ் முல்லர் சுருதி (Shruti) என்ற…

லா.ச.ராமமிருதத்தின் சிறுகதைகள்

தமிழ்ப் புனைவிலக்கியத்தில் தன்னுடைய தனித்துவமான நடைக்காகவும் மீபொருண்மை சித்திரிப்புக்காகவும் முக்கியமான எழுத்தாளராக லா.ச.ராமமிருதம் கருதப்படுகிறார். மலேசியச் சூழலில் லா.ச.ராமமிருதத்தின் மனமொழியும் சிந்தனையும் முயங்கும் எழுத்துநடை சார்ந்த பாதிப்பை எழுத்தாளர் சீ.முத்துசாமியின் எழுத்துகளில் காணலாம். அதைத் தவிர, லா.ச.ராமமிருதத்தின் எழுத்துகள் குறித்த வாசிப்பும், கலந்துரையாடலும் மலேசிய வாசகச்சூழலில் அதிகமும் இடம்பெறவில்லை. தமிழாசியா மாதந்தோறும் நடத்தி வரும் சிறுகதை…