
கால் முட்டிகள் இரண்டும் வலிக்கத் துவங்கியது. வலது முட்டியால் உடலைத் தாங்கிக் கொண்டு, இடதுகால் முட்டியைத் தளரச் செய்தேன். பின்னர் அந்தச் சலுகையை வலதுகால் முட்டிக்கும் கொடுத்தேன். மீண்டும் வலதுகாலைத் தரையில் ஊன்றி இடதுகாலைத் தூக்கும் பொழுது சற்றுத் தடுமாற என் கன்னத்தில் ஓங்கி அறைந்தான் சந்துரு. “கைய மேல தூக்கி வச்சி ஒழுங்கா முட்டி…














