
கோலாலம்பூரில் ‘உலகத் தமிழ் உணர்வாளர் ஒருங்கிணைப்பு மாநாடு’ 24-25.06.2017 ஆகிய இரு தினங்கள் நடைப்பெற்றது. மலேசியத் தமிழர் தன்மான இயக்கம் என்ற அமைப்பு இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தது. இந்த மாநாட்டில் உரையாற்றவும் கலந்துரையாடல்களில் கலந்துகொள்ளவும் தமிழக திராவிட கழக பேச்சாளர்களும், திராவிட கருத்தாக்க சிந்தனையாளர்களும் திரளாக வந்திருந்தனர். மாநாடு முடிந்த பிறகு மாநாட்டிற்கு வருகை…

















