Category: கட்டுரை

நான் அறிந்த பி.எம்.மூர்த்தி

2008 ஆம் ஆண்டின் இறுதி அது. புருவங்களிலும் மீசையிலும் உரோமம் அடர்ந்திருந்த ஒருவர் நான் வேலை செய்த பள்ளிக்கு வந்திருந்தார். அவர் கையில் அவ்வருட ஆறாம் ஆண்டு மாணவர்களுக்காக நான் தயாரித்த பயிற்சி நூல் (module) இருந்தது. “இதைத் தயாரித்தவர் நீங்களா?” என்றார். “ஆம்” என்றேன். தன்னைத் தேர்வு வாரிய அதிகாரி என அறிமுகம் செய்து…

பாட்டையை உருவாக்கிய முன்னோடி

2016 ஆம் ஆண்டு வாக்கில் எழுத்தாளர் ஜெயமோகன் விதி சமைப்பவர் எனும் கட்டுரையை எழுதியிருந்தார். ஒரு துறைக்குள் தனியொரு மனிதராகத் தளராத ஊக்கத்தால் மாற்றங்களையும் பங்களிப்பையும் கொண்டு வரும் முன்னோடிகளைப் பற்றிய மிக முக்கியமான கட்டுரை அது. அந்தக் கட்டுரையையொட்டி எழுத்தாளர் ம. நவீன் மலேசியாவில் அப்படி விதி சமைப்பவர் எனும் பதத்துக்கு எல்லா வகையிலும்…

மூர்த்தியும் நானும்

சிறு வயது முதலே நான் ஒரு தனிமை விரும்பி. நட்பு வட்டம் என்று எனக்கு இருக்காது. பள்ளிக்குச் செல்லும் முன் நண்பர்கள் எவருமிலர். பள்ளிக்குச் சென்ற காலத்தில் ஒரு சில தோழர்கள். அவர்களுடன் பள்ளி அளவிலான நட்பு மட்டுமே. ஆசிரியரான பிறகு ஒரு சில ஆசிரிய நண்பர்கள். அவர்களுடனும் பள்ளிக்கூடம், செய்யும் தொழில் என்ற அளவில்தான்…

ஆலவாயன் – அர்த்தநாரி: இரு நாவல்களில் ஒரு பார்வை

குடியானவர்களின் வாழ்க்கை முறையை ஆங்கிலேயர் ஆட்சி காலப் பின்னணியில் சொல்லப்பட்டுள்ள கதை ‘ஆலவாயன்’. காளி, பொன்னா, வல்லாயி, சிராயி, முத்து, வெங்காயி, நல்லையன் என ஒவ்வொருவரும் சேர்ந்து கதையை நகர்த்தியுள்ளார்கள். நாவலின் தொடக்கத்தில் காளியின் தற்கொலை மிரட்டும் தொனியில் துல்லியமாக சித்தரிக்கப்பட்டது போலவே நாவலின் பல பகுதிகளில் சித்தரிப்புகள் ஒரு விதப் பதற்றத்தைக் கொடுக்கக்கூடியவை. காளியின்…

மனங்களின் நகர்வு மாதொருபாகன்

‘மாதொருபாகன்’ நாவல் பிறழ் உறவு கொண்ட மனித மனத்தைக் கூர்மையாக ஆராய்கிறது. பிறழ் உறவு சமூகத்தின் நெறி முறைகள், மரபுகள் மற்றும் எதிர்பார்ப்புகளைக் கேள்விக்குள்ளாக்குகிறது. ஒழுக்கம் மற்றும் அறம் சார்ந்த கேள்விகளை எழுப்புகிறது.  எது சரி, எது தவறு என்ற விவாதத்தை உருவாக்குகிறது. இதன் மூலம் நம்மை நாமே நம்முடைய சொந்த நம்பிக்கைகளையும், விழுமியங்களையும் மறுபரிசீலனைச்…

மூர்த்தி எனும் சிறுவன்

‘தொலைந்தது எதுவென்றே தெரியாமல் தேடிக்கொண்டிருக்கிறேன்…’ என்ற யுவனின் இந்தக் கவிதை வரியைத் தொடக்கத்தில் வாசிக்கும்போதெல்லாம் நிலையற்ற தேடலின்மை, இலக்கற்ற வாழ்க்கை, குழப்பமான மனநிலை, மனச்சோர்வு என சில நேரங்களில் எனக்குள் எழும் எண்ணங்களே நினைவில் வருவதுண்டு. எதை தேடிப் பயணிக்கின்றோம், எதை அடைகின்றோம், இதற்கிடையில் எழும் சவால்களைக் கண்டு துவண்டு போகுதல் போன்ற எதிர்மறை எண்ணங்கள்…

தற்காலிக நிழல்

நவீன தமிழர் வாழ்வில் மிகப் பெரிய தக்கத்தை ஏற்படுத்திய ஊடகமாக திரைப்படத்துறை விளங்குகின்றது. மேடை நடகம், தெருக்கூத்து போன்ற கலைகளை அடிப்படையாக கொண்டு தமிழ் திரைப்படத்துறை உருவானாலும், அது தன் கவர்ச்சிகரமான ஈர்ப்பால் அனைத்து தரப்பு மக்களின் செல்வாக்கையும் விரைவில் பெற்று தமிழர் சிந்தனை, பண்பாடு, அரசியல் என பலவற்றிலும் தன் ஆதிக்கத்தைச் செலுத்தத் துவங்கி…

பெருஞ்செயல்களின் அளிப்பும் ஏற்பும்

நமது வாழ்க்கை நமது செயல்பாடுகளால்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. நல்லதும் அல்லதும் விளைவது நமது செயல்பாடுகளால்தான். இன்று நாம் நம் வாழ்க்கையில் துய்கின்ற பல்வேறான படைப்புகள் அனைத்தும் எங்கோ எப்போதோ யாரோ ஒருவரால் அல்லது கூட்டுச் செயல்களால் உருவாக்கப்பட்டவை என்பதுதான் உண்மை. நல்ல செயல்களால் மனித வாழ்க்கையில் அகம் புறம் என்ற இரு நிலைகளிலும் வளர்ச்சியியும் மேன்மையும்…

நாய், பூனை மற்றும் மனிதன்

எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களின் ‘வேல்’ சிறுகதைத் தொகுப்பு 2024-இல் வெளியிடப்பட்ட நூலாகும். இத்தொகுப்பில் மொத்தம் 13 சிறுகதைகள் அடங்கியுள்ளன. தொகுப்பில் உள்ள கதைகள் இதற்கு முன்னறே இதழ்களில் வெளியாகி அதன்பின் காலச்சுவடு பதிப்பகத்தின் வழி நூல் வடிவம் பெற்றுள்ளது. இந்தத் தொகுப்பில் உள்ள ஒன்பது கதைகள் ஒரு பொருள் (பாடுபொருள், பாத்திரங்கள், கதை சொல்லும்…

பி. எம். மூர்த்திஎனும்ஆசிரியர்

பி. எம். மூர்த்தி அவர்களை நேர்காணல் செய்யும் வாய்ப்பு வல்லினம் வழியாக அமைந்தது. குறிப்பாக ஒரு பள்ளி ஆசிரியராக அவர் மேற்கொண்ட பயணங்களை அறிந்துகொள்வது ஓர் ஆசிரியரான எனக்கு ஊக்கமூட்டுவதாக இருந்தது. உண்மையில் பி. எம். மூர்த்தி அவர்களின் முதல் பள்ளி அனுபவம் மிகவும் சுவாரசியமானது. அவர் 1984ஆம் ஆண்டு லாடாங் பீயோங் என்ற முதல்…

போண்டு – சமூக விலங்குகளின் உளவியல் தொகுப்பு

மனிதன் ஒரு சமூக விலங்கு. மனிதனின் விலங்கியல் இயல்புகளைச் செல்லப்பிராணிகளைக் கொண்டு விவரிக்க இயலும் முயற்சிதான் ‘போண்டு’ சிறுகதை தொகுப்பு. பெருமாள் முருகனின் ‘வேல்’ எனும் சிறுகதை தொகுப்பைத் தொடர்ந்து,  ‘போண்டு’  பதினொன்று சிறுகதைகளை உள்ளடக்கிய தொகுப்பாக வெளியாகி உள்ளது. வளர்ப்பு பிராணிகளை முதன்மை கதாபாத்திரமாகக் கொண்டிருந்தாலும் அதை வளர்க்கும் மனித விலங்கினைப் பற்றிய கதைகளாகவே என்னால் இக்கதைகளைப் புரிந்துகொள்ள முடிகிறது. மனிதன் என்பவன்…

காலமாற்றங்களின் கதை

கொரோனா காலகட்டத்தைப் பின்புலமாக கொண்ட ‘நெடுநேரம்’ நாவலை எழுதியிருக்கிறார் எழுத்தாளர் பெருமாள் முருகன். முந்தைய தலைமுறை மற்றும் இன்றைய தலைமுறை எனும் இரு வேறு காலகட்டத்தில் வாழும் மனிதர்களின் காதலையும் அதன் மாற்றங்களையும், வாழ்வின் யதார்த்தத்தையும் பேசுவதோடு மட்டுமில்லாமல் எல்லா காலகட்டத்திலும் கருப்பு, வெள்ளை என இரண்டும் இணைந்த சாம்பல் நிற அகம் பொருந்திய மனிதர்களை…

செல்சி நீலம் – சீன மனம் பேசும் கதைகள்

“மொழிபெயர்ப்பு இல்லையெனில், நான் என் சொந்த நூற்றாண்டின் எல்லைக்குள் மட்டுப்படுத்தப்பட்டு இருப்பேன்” என கண்டாலே கால்வினோ கூறியதுதான் செல்சி நீலம் புத்தகத்தைப் படித்து முடித்த பிறகு எனக்குத் தோன்றிய முதல் சிந்தனை‌. வெளிநாட்டவர்களிடம் மலேசியாவின் கவர்ந்திழுக்கக் கூடிய பண்புகளை விவரிக்கச் சொன்னால், மூவின மக்களின் உணவும், கலாச்சார பாரம்பரியங்களும் அதில் முக்கிய காரணியாக அமையும். சூழல்…

அரணென்றானவள்

1 2023ல் நித்யவனத்தில் நிகழ்ந்த குரு நித்யா காவிய முகாமில் நீலி இதழாசிரியரும், எழுத்தாளருமான ரம்யாவுக்குப் பெண்ணெழுத்து சார்ந்து ஓர்  அமர்விருந்தது. அதில் ரம்யாவிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வி “நீங்கள் பெண்ணெழுத்தை முதன்மையாக வைத்து பத்திரிகை தொடங்கியிருக்கிறீர்கள், அதற்கு ‘நீலி’ என்ற ரத்தம் குடித்துக் கொல்லும் நாட்டார் தெய்வத்தின் பெயரை வைக்க காரணம் என்ன?” என்பதாக…

பி. எம். மூர்த்திக்கு வல்லினம் விருது

பி. எம். மூர்த்திக்கு வல்லினம் விருது 2025க்கான வல்லினம் விருது பி. எம். மூர்த்தி அவர்களுக்கு வழங்கப்படுகிறது.  மலேசியக் கல்விச் சூழலில் தமிழிலக்கியப் பாடம் நிலைத்திருப்பதற்கும் அதில் மலேசிய நாவல் இடம்பெறுவதற்கும் வித்திட்டவர் பி. எம். மூர்த்தி. ஆரம்பப்பள்ளி அடைவுநிலை தேர்வுத்தாள் வடிவத்தை முழுமையாக மாற்றியமைத்து அதில் படைப்பிலக்கியம் எனும் புதிய பகுதியை உருவாக்கியவர்.   படைப்பிலக்கியப்…