Category: கட்டுரை

சோழிகளை விசிறும் புனைவுக்கலைஞன்

மேஜிக் தாத்தாவை நான் பயின்ற தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பலருக்கும் தெரியும். என் நண்பனை என்றாவது ஒருநாள் பள்ளிக்குக் காரில் அழைத்து வருபவர். அது சிவப்பு நிறக் கார். பெரும்பாலான ஆசிரியர்களே மோட்டார் சைக்கிளில் வந்த காலத்தில் பளிச்சிடும் அந்தச் சிவப்பு நிறக் காரின் மீதும் முழுமையாக நரையேறிய மேஜிக் தாத்தா மீதும் எங்களுக்குப் பெரிதும் ஈர்ப்பிருந்தது.…

யாதனின் யாதனின் நீங்கினோர் காதை

புதிதாக வந்திருக்கும் சினிமாப் பாடல் வரிகளுக்கான தனியிடத்தை உருவாக்குவதற்காக அனுமதி பெறாமலே பள்ளிக்கூடத்தில் படித்த பாடங்களை அழித்துவிடும் தானியங்கி நினைவாற்றல் தான் என்னுடையது என்றாலும், சில ஆங்கில/தமிழ் செய்யுள்களும் பாடங்களும் எப்படியோ அந்த நினைவாற்றலுக்குத் தப்பி கொஞ்சம் மீதமிருக்கவே செய்கின்றன. அப்படி என் நினைவாற்றலில் தப்பிப் பிழைத்த செய்யுள்களுள் ஒன்று ஷேக்ஸ்பியரின் ‘As You Like…

எம்.யுவன் கவிதைகள்: தீராத ருசி

சொற்களும் அர்த்தங்களும் கிளியென்று சொன்னால் பறவையைக் குறிக்கலாம் பச்சையைக் குறிக்கலாம் மூக்கைக் குறிக்கலாம் பெண்ணைக் குறிக்கலாம். கூண்டுச் சிறையைக் குறிக்கலாம். சமயத்தில் அது கிளியையும் குறிக்கலாம். இப்படித்தான் துவங்குகிறது ‘தீராப்பகல்’ என்ற எம். யுவனின் மொத்தக் கவிதைத் தொகுப்பு. ஆங்கிலத்தில் ‘Absolute’ என்ற சொல்லும் ‘Relative’ என்றவொரு சொல்லும் இருக்கின்றன. முன்னதற்கு ‘அறுதி’ அல்லது ‘துல்லியம்’…

தனியனின் பெருவெளி

புராதனக் கோயில் விமானத்தில்பன்னெடுங்காலமாய் ஒட்டிக்குந்தி வெளிறிய புறாஏனென்றே தெரியாமல்பறந்து செல்ல முனைந்தது.எண்ணற்ற மின்னல்களைஇடிகளை பொழியும் தாரைகளைஓயாமல் உரசும் காலத்தைதாண்டிவந்தபோது இல்லாதஅவசரம் இன்று ஏனோ.கணக்கற்றதூதுப் புறாக்கள்பந்தயப் புறாக்கள்காதல் புறாக்கள்பறந்து கடந்த வானம்மேகத் துணுக்கும் இன்றிவெறிச்சிட்டு இருந்ததுவோகோபுரத்தை நீங்காதுஅழுத்தி வைத்த விசையேதான்மண்ணை நோக்கிஈர்த்ததுவோ,கீழ் நோக்கி உடல்இழுபடும் அதே வேகத்தில்உயரத் துடித்த ஆன்மாவின்உந்துதலோகாலங்காலமாய் ஒடுங்கிவிரிய மறுத்த இறக்கைகளைமீறிமேல்நோக்கி எழும்பிஅல்லாடி அல்லாடிமெல்ல…

ஒரு வட்டம் பல மையங்கள்: குள்ளச் சித்தன் சரித்திரம் நாவலை முன்வைத்து

அன்றைய இரவு, இரவுணவு முடித்துவிட்டு நானும் என் மனைவியும் அடுக்களையை சுத்தம் செய்து கொண்டிருந்தோம். அவள் சிங்க்கில் பாத்திரப்பண்டங்களைத் துலக்கிக்கொண்டிருந்தாள். நான் மேடையை சுத்தம் செய்து கொண்டிருந்தேன். மொழுகி வைத்த மேடையை எந்தத் துணியால் துடைக்க வேண்டும் என்று அவளிடம் கேட்டபோது, பால்கானியில் காயும் நீல கலர் கைப்பிடித்துணி அதை எடுத்துக்கோ என்றாள். நான் பால்கனிக்கு…

சிவானந்தமும் சிங்கப்பூர் இலக்கியமும்

சிங்கப்பூரில் தமிழில் தொடர்ந்து அசராது எழுதுவதற்கான உயிராற்றலைக் கண்டடைந்துள்ள மிகச் சிலரில் சிவானந்தம் நீலகண்டமும் ஒருவர். எழுதப்படும் படைப்புகளை ஒட்டி விரிவான உரையாடல்கள் வாசக சூழலில் எழாவிட்டாலும் ஏறக்குறைய ஆறு ஆண்டுகளாக வாரம் தவறாமல் எழுதி வருபவர். சிங்கப்பூருக்கு அப்பாலும் பரந்த தமிழ் எழுத்துலகில் அறிமுகங்களை ஏற்படுத்திக்கொண்டிருப்பவர். பத்தி எழுத்தாளர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர்கள் சிராங்கூன் டைம்ஸ்…

எஸ். எம். ஷாகீர் ஓர் அறிமுகம்

மலேசியாவில் நவீன மலாய் இலக்கியச் சூழலைத் தொடக்கி வைத்தவர்கள் அசாஸ் 50 எழுத்தாளர்கள். அவர்களைத் தொடர்ந்து 60ஆம், 70ஆம், 80ஆம் ஆண்டு படைப்பாளர்கள் தங்களின் பங்கினையாற்றி வந்தனர். நவீன மலாய் இலக்கியச் சூழலில் யதார்த்தவியலை மையமாகக் கொண்ட எழுத்துப் படைப்புகள் தொடர்ந்து வெளிவரத் தொடங்கிய காலக்கட்டத்தில் யதார்த்தவியலோடு புராணங்களையும் வரலாற்றையும் தொடர்புப்படுத்தி புனைவுலகில் புதிய முயற்சியில்…

பெருந்தேவியின் குறுங்கதைகள்: தமிழ்ப் புனைவின் புதிய நகர்வு

குறுங்கதை எனும் வடிவம் கோவிட் பெருந்தொற்று காலத்தில் பரவலாக எழுதப்பட்டபோது அது குறித்து தங்கள் புரிதலுக்குள் கட்டமைக்க பல்வேறு கருத்துகள் கூறப்பட்டன. அவை குமுதம், விகடன் போன்ற இதழ்களின் ஒரு பக்கக் கதைகளின் வடிவம் என்றும், ஒரு வரிக் கதைகள், படக்கதைகள், துணுக்குகள் போன்றவற்றின் மேம்படுத்தப்படுத்தப்பட்ட பாவனை என்றும் சமூக ஊடகங்களுக்கென்றே எளிமையாக்கப்பட்ட கலை வடிவம்…

குவான் யின்: பேரன்பும் பெண்ணான தெய்வமும்

உருவ வழிபாடு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனித நடைமுறைகளின் ஒரு பகுதியாக இருந்துள்ளது. உலகெங்கிலும் உள்ள கலாச்சாரங்களின் பிரதிபலிப்பு மற்றும் பரிணாம வளர்ச்சியின் பல்வேறு தாக்கத்தால் உருவ வழிபாடு பலதரப்பட்ட வடிவங்களை எடுத்து, தற்போது 21-ஆம் நூற்றாண்டிலும் மக்களால் தீவிரமான மத வழிபாடாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. பல கடவுள் கொள்கை (polytheistic) கொண்ட நாகரிகங்களான மெசொப்பொதாமியா (Mesopotamia),…

அசோகமித்திரனை அறிதல்

கலை என்பது குறியீடுகளின்வழி உணர்வுகளையும் எண்ணங்களையும் தொடர்புப்படுத்தும் முறை என்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன். ஒலிக் குறியீடுகள் இசைக் கலை ஆகின்றன, உடல் அசைவின் குறியீடுகள் கூத்துக் கலையாகின்றன, காட்சிகளின் குறியீடுகள் ஓவியக் கலையாகின்றன. அதுபோலவே சொற்களின்/ மொழியின் குறியீடுகள் இலக்கியக் கலையாகின்றன. இப்படிச் சொற்கள் உணர்த்தும் குறியீடுகளைப் புரிந்து கொள்ளும்போது இலக்கியம் நம் வசப்படுகிறது. இலக்கியக்…

புதுமைப்பித்தனின் மூன்று சிறுகதைகள்: தமிழாசியா கலந்துரையாடல்

சிறுகதை என்பது ஒரு கலை வடிவம். அதன் எளிமையும் வாசிக்க எடுத்துக்கொள்ளப்படும் நேரமும் பலரையும் அதன்பால் ஈர்க்கிறது. இச்சூழலில் மொழியால் ஆன அக்கலை வடிவத்தை முழுமையாகச் சென்றடைகிறோமா என்பது புதிய வாசகர்களிடம் எப்போதும் உள்ள பிரதானமான கேள்வி.  சிறுகதை வாசிப்பு என்பது அதனுள் பூடகமாகச் சொல்லப்படும் கருத்தை உருவி எடுத்து ஒப்புவிப்பதாகவே மலேசியாவில் பழக்கமாகிவிட்ட சூழலில்…

உலகத் தமிழ்க் களஞ்சியம்: காகித விரயம்

உமா பதிப்பகம் 2018-ஆம் ஆண்டு வெளியிட்ட உலகத் தமிழ்க் களஞ்சியம் தொகுப்பின் இரண்டாம் மற்றும் மூன்றாம் தொகுதியைக்  கடந்த வாரம் கவனிக்க நேர்ந்தது. கெட்டி அட்டையில் அழகிய முகப்புடனான களஞ்சியம் அது. இரண்டாவது தொகுதியின் இறுதி சில பக்கங்களில் மலேசிய தகவல்கள் தொடங்கினாலும் மூன்றாவது தொகுதியில்தான் பெரும்பாலான மலேசிய தகவல்கள் உள்ளன என்று அறிந்துகொள்ள முடிந்தது.…

Wiki Impact : மை ஸ்கில்ஸ் அறநிறுவனமும் சமூகத்தின் நம்பகத்தன்மையும்

விக்கி இம்பேக்ட் ஆய்வு முடிவுகள் மலேசியாவுக்கு வரும் முக்கியமான ஆளுமைகள், இலக்கிய நண்பர்கள், கலைஞர்கள் என பலரையும் நான் மை ஸ்கில்ஸ் அறநிறுவனம் நடத்தும் கல்லூரிக்கு அழைத்துச் செல்வதுண்டு. 2012ஆம் ஆண்டு கிள்ளான் நகரில் அமைந்துள்ள கைவிடப்பட்ட பேருந்து முனையத்தில் அக்கல்லூரி இயங்கிய காலத்திலும் 2018ஆம் ஆண்டு தொடங்கி கலும்பாங்கில்  34 ஏக்கர் நிலப்பரப்பில் இயங்கிக்…

சிங்கப்பூரின் மூன்று நூல்கள்

ஏறக்குறைய 150 ஆண்டுகால வரலாற்றைக் கொண்டிருக்கும் சிங்கப்பூர் தமிழ் இலக்கியத்தடத்தை இரு வழிகளில் பார்க்கலாம். ஒன்று இலக்கியங்களைப் படைத்தவர்கள். மற்றது இலக்கிய ஆக்கங்கள். சிங்கப்பூரின் முதல் தமிழ் நூலாகக் கருதப்படும் 1872ல் வெளிவந்த முகம்மது அப்துல்காதிறுப்புப் புலவர் எழுதிய முனாஜாத்து திரட்டு, 1887களில் யாழ்ப்பாணத்து சதாசிவ பண்டிதர் எழுதி வெளியிட்ட வண்ணையந்தாதி, வண்ணை நகரூஞ்சல், சிங்கை…

ந. பாலபாஸ்கரன்: மலேசியா -சிங்கை வட்டாரத்தின் முதன்மையான ஆய்வாளர்

ந. பாலபாஸ்கரன் உடல்நலக் குறைவினால் பிப்ரவரி 19 தமது 82 வயதில் காலமானார் என்ற தகவலை ஷாநவாஸ் தெரிவித்தபோது பெரிதாக அதிர்ச்சி இருக்கவில்லை. கடும் நோய்வாய்ப்பட்டிருந்த அவர் மரண நாட்களை எண்ணிக்கொண்டிருந்தார். மரணத்துடன் போராடுவதை மெல்ல மெல்ல நிறுத்திக்கொண்டே வந்தார். ஒருவகையில் அவர் தன் மௌனத்தால் அதை தன் அன்புக்குரியவர்களுக்கு முன்னமே அறிவிக்கவும் செய்தார். வானொலிக்…