Category: சிறுகதை

சருகு

1 படுக்கை அருகே இருந்த மேசை மீது அலைபேசியை வைத்த சீனிச்சாமி மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டார். நகங்கள் கட்டில் விளிம்பில் பலமாய் பதிந்திருக்க தொண்டை வழி இறங்கிய வியர்வை மயிரற்ற மார்பின் ஊடாக வழிந்தது. பழுப்பேறியிருந்த வேட்டியைத் தொடைகளுக்கிடையே ஒடுக்கிக்கொண்டு வாசல் பக்கம் பார்த்தார். வெயில் ஏறுவதற்கு வெகுநேரம் இருந்தது. முழுதாய் விடிந்திருக்காத இவ்வேளையில் செல்லப்பாவை…

முத்தத்திற்குப் பிறகு கடவுளானவன்

“எங்கே சென்றிருந்தாய் மகதலா? நாம் இரவுணவுக்குச் செல்ல வேண்டும். அங்கே சீடர்களும் நமக்காக காத்திருப்பார்கள்.” இந்த அழகான மாலை பொழுதில் எருசலேம் நகரமே பாஸ்கா திருவிழாவிற்காகத் தயாராகிக் கொண்டிருக்கிறது. எகிப்தில் அடிமைகளாயிருந்த இஸ்ரயேல் மக்களை மோசே வழியாக கடவுள் மீட்ட நாளையே பாஸ்கா திருவிழாவாகக் இஸ்ரயேல் மக்கள் கொண்டாடுகிறார்கள். இன்று இரவு எருசலேம் நகர மக்கள்…

கிள்ளான் காகம்

நீ கிள்ளானில் வசிக்கும் ஒரு காகம். இன்றும் நீ நடுக்கத்துடன் தான் எழுகிறாய். என்னதான் சூரியன் மெல்ல உதித்துக்கொண்டிருந்தாலும், வானம் இன்னும் இருண்டவண்ணமே இருக்கிறது. குச்சிகளாலான உன் கூட்டிலிருந்து எதிரே இருக்கும் திரு.ங்-ஙின் வீட்டை நீ எட்டிப் பார்க்கிறாய். நீ உன் கறுத்த இறக்கைகளை அசைக்க, உன்னுடன் வசிக்கும் சகோதரர்கள், உறவினர்கள், அண்டை மரத்துக் காக்கைகள்…

சைமனின் தந்தை

பள்ளியின் வாசல் திறந்தவுடன் மாணவர்கள் ஈசல் கூட்டம்போல ஒருவரை ஒருவர் இடித்துக்கொண்டும் முந்திக்கொண்டும் அரக்கப் பரக்க வெளியே விரைந்தனர். கட்டொழுங்கோடு வரிசையாகப் புறப்படாமல், முடிச்சுக்களிலிருந்து அவிழ்த்துக்கொண்டது போன்று சிதறிக்கொண்டும் திட்டுத் திட்டாகவும், கூட்டமாய்ப் பேசிக்கொண்டும் கலைந்தும் மாணவர்கள் இரவு உணவுக்காக விரைந்துகொண்டிருந்தனர். மாலை வேளை. லா பிளாஞ்ச்சோட் அந்த ஊருக்குப் புதிதாய்க் குடியேறி இருக்கிறாள் என்பதை…

மறதி

“வேசி… நான் மட்டும் இப்பொழுது ஊரில் இருந்திருந்தால், நிச்சயமாக அவளை ஏதாவது செய்திருப்பேன்… வேசி… காமப்பசி எடுத்து அலைகின்றாள்…” என உடைந்த ஆங்கிலத்தில் துண்டுதுண்டாக அக்கினோ சொல்லிக் கொண்டிருந்தான். அவனருகில் சுவரைப் பற்றியவாறு கிழவர் நின்று கொண்டிருந்தார். “அடுத்ததாக, அவள் மீது வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்யலாமென இருக்கிறேன்… எனக்குச் செய்த துரோகத்துக்கும் மகனைச் சரியாகப்…

டாம் அண்ட் ஜெர்ரி

அந்த மொட்டை வால் பூனையைப் பிடித்து பொறித்து தின்ன வேண்டும். அதற்குச் சரியான திட்டமொன்றை வரைய வேண்டும். மஞ்சள் நிறமான அந்தப் பூனை எங்கள் தோட்டத்தில் ஒரு கோழிக்குஞ்சைக் கூட விட்டுவைத்ததில்லை. கலர் கோழிக்குஞ்சுகள், இறைச்சிக் கோழிக்குஞ்சுகளென பேதமின்றி தின்று விடுகிறது.  தோட்டம் முழுக்க எல்லா கோழிக்குஞ்சுப் பிரியர்களும் பயந்து நடுங்குவது அந்த மொட்டை வால்…

புதையல்

1 அரியது எனத் தோன்றும் பொருட்களையெல்லாம் சேர்த்து வைக்கும் பழக்கம் எந்தப் பிராயத்தில் தொற்றிக் கொள்ள ஆரம்பித்தது என சரியாகச் சொல்ல முடியவில்லை. என் ஊரிலேயே நன்கு பம்பரம் விடத் தெரிந்தவரான பாண்டி அண்ணன் அழகான கோலிக்குண்டுகளைச் சேர்ப்பவராக இருந்தார். என்னுடனேயே சுற்றித் திரியும் ஓவு என்ற சின்னப்பையன் எதிர்க்காற்றில் வேகமாகச் சுற்றுவதற்கு இசைவான ஓலைகளைச்…

அனல் மடி

சிலாவாடீ கடற்கரை ரிசார்ட்டிலிருந்து பார்க்கையில், ஒட்டு மொத்த தாய்லாந்து கடலும்  விழிகளுக்குள் அடங்கி விடுவதாகவே எண்ணிக் கொண்டேன். நோக்கு மறையும் தொலைவிற்கு வெறும் நீல திரை போன்ற நீர்தான். ‘என் ஊரிலும் இதே நீர்தான் இருக்கின்றது. ஏன் அங்குப் பார்த்த கடலை விட, இங்குப் பார்க்கும் கடல் வேறொரு உணர்வைத் தருகிறது’ என யோசித்தேன். அப்பொழுதுதான்…

ஒலிப்புதையல்

“சூரியன ரசிச்சது போதும் மாமா!” பானுதான் சொன்னாள். சட்டென திரும்பலாமா வேண்டாமா என நிதானித்தேன். இப்படி நிதானமாக அமர்ந்து காலை நேரச் சூரியனைப் பார்த்து பல நாட்களாகிவிட்டதென தோன்றியது. சரியாகச் சொல்வதென்றால் மூன்று வருடங்கள்.  ”சாப்பாடு ஆரிடப்போவுது… சீக்கிரம் வாங்க மாமா,” குரலில் அன்பிருந்ததால் சிரித்தபடியே மனைவியைப் பின் தொடர்ந்தேன். தமிழகத்துப் பெண். கிராமத்துக்காரி. சொந்தம்…

உப்பிலி

1 மேனேஜரிடம் முறையிட்டு நான்கைந்து நாட்களாகிவிட்டது. ஒன்றும் பதில் இல்லை. ஒருவேளை என் விருப்பத்திற்கு எதிராக அவர் முடிவு எடுப்பாரெனில் இங்கிருப்பதில் பயனில்லை. பேப்பர் போட்டுவிட்டு வேறிடம் பார்க்கலாம். ஒரு மணி நேரத்தில் அடுத்த வேலையை வாங்கிவிடலாம். ஆனால் இங்கே இருக்கும் வசதிகளாலும் பழகிய முகங்களாலும் அவ்வளவு எளிதில் விட்டுக் கிளம்பிட மனம் ஒப்பவில்லை. பதினைந்து…

அற்புதம்

அப்பாவின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரனைக்கு வருகிறது. ஒரு மாதமாக டெல்லியிலிருக்கும் உறவினர் வீட்டிலிருந்து அதற்கான வேலைகளைச் செய்தோம். சென்னை உயர்நீதிமன்றத்தில் எங்களுக்கு எதிராக வந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பா மனு போட்டார். ஒரு அரசாங்கத்திற்கு எதிராக தனி மனிதர் போராடுவது கடினம். அதோடு வெற்றி பெறுவதென்பது அரிது என பல்வேறுவிதமாக சொல்லியபோதும்…

சிலுவை மரம்

“மக்கா, உனக்க அப்பன கடலுக்கு கூட்டிட்டு போனவனும் நான் தான், இப்ப என்னனா உன்னையும் கூட்டிட்டு போக சொல்லுதா உன் அம்ம” என்றவாறே வலையின் கிழிந்த பகுதிகளைத் தைத்துக் கொண்டிருந்தார். நெடுக்காக பாதி உடைத்த பிளேடை உதட்டால் கவ்வி கொண்டே அவர் பேசுவதை அவன் ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். “நீயோ சின்ன பயலா இருக்க, உன்…

கோதுமை மணி

முட்டம் கிராமத்தில் இன்று மக்கள் யாரும் மீன் பிடிக்கச் செல்லவில்லை. வழக்கத்திற்கும் மாறாக கடல் அலையின் உயரம் இன்று அதிகமாகவே இருந்தது. ஓயாதக் கடல் அலையும் கட்டித் தழுவும் அதன் உப்புக் காற்றும்தான் இம்மக்களுக்கு முதல் உறவு. அனைவரும் கடல் அலையைப் பார்த்தபடி கடற்கரை மணலில் அமர்ந்து சீமோனுக்காகக் காத்திருக்கிறார்கள். “சீமோன் மாமா வந்தாச்சா?” என்று…

நினைவின் மழை

மீண்டும் ஓர் மழைகாலம். இந்த முறை வேறொரு சாளரம். ஆண்டுக்கொருமுறை சாளரத்தின் வழியாகத் தெரியும் காட்சி மட்டும் மாறிக் கொண்டே இருக்கிறது. எங்கள் கல்லூரி அமைந்திருக்கும் கிண்டி சென்னையின் மத்தியப்பகுதியில் இருக்கும் சிறிய காடு என்றுதான் சொல்ல வேண்டும். கருமையான பெரிய தண்டுகளுடனான மரங்கள் செறிந்து நிறைந்த இடம். எப்போதும் இலைகள் விழுந்து செறிந்து மட்கிய…

ம் என்ற மரணம்

குளிரில் உறைந்தா; நெருப்பில் கருகியா; நீரில் மூழ்கியா? எப்படி நடக்க வேண்டும்? கல்லைக் கட்டிக் கொண்டு கிணற்றில் குதிக்கலாம், ஆனால் அவள் வீட்டின் முன் கிணறு கிடையாது. சுருக்கிட்டுக் கொண்டு மரத்தில் தொங்கலாம் ஆனால், அவள் வீட்டின் முன் மரம் கிடையாது. விஷம் குடிப்பவர்கள் உண்மையிலேயே வாழவே விரும்புகிறார்கள். சம்பவத்துக்கும் மரணத்துக்கும் அதிக கால இடைவெளி…