
‘வல்லினம்’ வருடம் தோறும் மேற்கொள்ளும் பல்வேறு கலை இலக்கிய முயற்சிகளின் முத்தாய்ப்பு தினமாகக் கலை இலக்கிய விழா கொண்டாடப்படுகிறது. 8ஆம் ஆண்டு கொண்டாட்டமான இவ்வருட நிகழ்ச்சி மிகக் கவனமாகத் திட்டமிடப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆளுமைகளும் ஆவணங்களும் மலேசிய நவீனத் தமிழ் இலக்கியத்திற்குப் பங்காற்றிய ஐவரை ஆவணப்படம் எடுப்பதென முடிவானபோது அப்பட்டியலில் மா.சண்முகசிவா, சீ.முத்துசாமி, அரு.சு.ஜீவானந்தன், சை.பீர்முகம்மது, கோ.புண்ணியவான்…