
அந்தி சற்று தயங்கியபடியே மயங்கிக் கொண்டிருக்கிறது. பாவமன்னிப்புப் பெற ரோமன் கத்தோலிக்கர்கள் மாதா கோவிலுக்குச் செல்லும் வெள்ளிக்கிழமையின் மாலை இது. நான் அங்குச் சென்று அதைச் செய்வது தெரிந்தால் அத்தை கோபப்படுவாள். யாருக்கும் தெரியாமல் செல்ல வேண்டும். முகம் தெரியாத ஒருவரிடம் மட்டுமே நம் பாவங்களையெல்லாம் அறிக்கையிட முடியும். ஒருவேளை எனக்கு அது விடுதலை அளிக்கலாம்…