
“எனக்கு என்ன ஆயிற்று?.. ஒன்றும் இல்லையே.. நன்றாகத்தானே இருக்கிறேன். பிறகு ஏன் சிந்தனை என்பது இவ்வளவு பாரமாக ஆகிப்போனது?” சிந்தித்துக்கொண்டே விழா அரங்கின் வாகன நிறுத்துமிடத்திற்கு வந்துவிட்டேன். வந்தவுடனேயே ரிஷானாவின் ஆடி காரைப் பார்த்துவிட்டிருந்தேன். மூன்று லிட்டர் V6 வெண்ணிற ஆடி Q7 மாடல். அந்தக் காரின் தனித்த அம்சமே அதை பார்த்தவுடன் புதியதா பழையதா…