
“இரு கொட்டகைக்கிடையில் எப்போதும் போல தேங்கி நிற்கும் பாசியேறிய நீரில் தவளைக்கண்கள் முளைத்திருக்கும். அவை தலைப்பிரட்டைகளாய் அவ்வப்போது வெள்ள மிகுதியில் கொட்டைகையோரம் மண் திட்டாய் உயர்த்தப்பட்ட கரையோரம் உலவித் திரியும் போது பார்த்திருக்கிறேன். இப்போது பெரிய மழை பெய்து நாளானதில் மடுவுக்குள் சுருங்கிக் கொண்ட நீண்ட கால்களைக் கொண்டு பறக்கும் தவளைகளைக் கொஞ்சமாக உற்றுப் பார்த்தபடி…