
நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கீழே உள்ள இணைப்பில் பதிவு செய்க http://events.tamilasiabooks.com
கனகலதா (லதா) ‘தீவெளி’ (2003), ‘பாம்புக் காட்டில் ஒரு தாழை’ (2004), யாருக்கும் இல்லாத பாலை (2016) ஆகிய மூன்று கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார். அவரின் ‘நான் கொலை செய்யும் பெண்கள்’ சிறுகதைத் தொகுப்பு 2008ஆம் ஆண்டுக்கான சிங்கப்பூர் இலக்கிய விருதை வென்றது. அவரின் சிறுகதைகளின் ஆங்கில மொழியாக்கம் The Goddess in the Living…
தொண்ணூறுகளின் பிற்பகுதியில் எழுதவந்த லதா கவிதைகளில் கால்பதித்தார். தொடர்ந்து கதைகளும் எழுதத் தொடங்கினார். தமிழ்நாட்டுத் தமிழருக்கு ஒருவிதமான சமூகச் சிக்கல்களும் உறவுகளும், ஈழத்துத் தமிழர்களுக்கு ஒருவிதமான சமூகச் சிக்கல்களும் உள்ளன. சிங்கப்பூர் தமிழ் வாழ்க்கையும் அவ்விதமே. என்றாலும் தமிழர்களின் பொதுப் பண்பாடு நம் வாழ்க்கையில் வலுவாகவே இதுவரை இருந்து வருகிறது.
‘ரேடியோ மலாயாவில்’ ஒலிபரப்பாளர், மலாயாப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர், சிங்கப்பூர்த் தொலைக்காட்சியில் செய்தி ஆசிரியர் எனப் பல்வேறு முகங்களை வெளிப்படுத்திய பாலபாஸ்கரன், புதுச்சேரியில் பிறந்து பினாங்கில் வளர்ந்து, கடந்த சுமார் நாற்பதாண்டுகளாக சிங்கப்பூரில் வசித்து வருபவர். இவரது இன்னொரு பரிமாணம் இலக்கிய, இதழியல், சமூக வரலாற்று ஆய்வாளராகத் தொடர்ந்து துல்லியமும் செறிவும்கூடிய ஆய்வுகளை வெளியிட்டு வருவதாகும். தன்னுடைய…
லதாவின் ‘யாருக்கும் இல்லாத பாலை’ யின் கவிதைகளை ‘பொருள் மயக்கின் அழகியல் (Aesthetics of ambiguity)’ என்று அடையாளப்படுத்துகிறார் எம்.ஏ.நுஃமான். கூடவே, ‘நேசத்துக்கும் வெறுப்புக்கும் இடையில் பயணிக்கும் கவிதைகள்’ எனச் சொல்லும் அவர், இதைக் கண்டடைந்ததற்கான வழித்தடங்களையும் இந்தத் தொகுதிக்கான பின்னுரையில் குறிப்பிடுகிறார். லதாவின் உணர்தல் தீவிர நிலை, சாதாரண நிலை, அதி தீவிர நிலை…
‘சிங்கைத் தமிழ்ச் சமூகம்: வரலாறும் புனைவும்’ என்ற கட்டுரைத் தொகுதி இரண்டு நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு சிவானந்தம் நீலகண்டனால் படைக்கப்பட்டுள்ளது. முதலாவது சிங்கைநேசன் தமிழ் வார இதழின் தரவுகளின் அடிப்படையில் 19ஆம் நூற்றாண்டில் சிங்கைத் தமிழர்களின் வாழ்வியல் பதிவு. அடுத்தது சிங்கப்பூர்த் தமிழ்ப் புனைவின் பதிவு.
நீண்ட மௌனத்திலேயே கரைந்தது பொழுது. எதிர் சோபாவில் அமர்ந்திருந்த கதிரும் என்னையே பார்த்துக்கொண்டிருந்தான். அவனுக்கு ஒரு சொல்லும் எழவில்லை. சுவரில் மாட்டப்பட்டிருந்த ஒரு ஓவியத்தையே நெடுநேரம் பார்த்துக்கொண்டிருந்தேன். இப்படியொரு அசாத்தியமான சூழ்நிலையில், ஏதாவது ஒரு பொருளைப் பார்த்துக்கொண்டேயிருப்பது அலையும் எண்ணங்களை ஒருமுகப்படுத்த உதவுகிறது. அந்த ஓவியம் பழைய பாணி ஓவியம்தான். அரிதானதும் அல்ல. அந்தியின் காவிநிற…
தமிழ் நாட்டுக்கு வெளியே இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய மூன்று நாடுகளில் தமிழ் இலக்கியம் தொடர்ந்து நிலையான இடத்தைப் பெற்றுள்ளது. ஆயினும் ஒப்பீட்டளவில் சிங்கப்பூர் இலக்கியம், மலேசிய இலக்கியம் என்று தனித்த அடையாளங்களைப் பெறுவதில் இன்றும் பின்தங்கியே உள்ளது. ஆனால் சிங்கப்பூர் படைப்புகளை ஐரோப்பிய, ஆஸ்திரேலிய பெருநிலங்களில் குடியேறிய தமிழ் எழுத்தாளர்களின் புலம்பெயர் இலக்கியங்களோடு ஒப்பிட்டு…
சிங்கப்பூரில் 1942 தொடங்கி 1945 வரை நீடித்த ஜப்பானியராட்சியின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் சொல்லிச் செல்கிறது வாழைமர நோட்டு. அந்த மூன்றரை ஆண்டுக்கால ஜப்பானியராட்சி வரலாற்றின் இருண்டப்பக்கங்களையும் அவலங்களையும் முன்னிறுத்தி பேசுகிறது இந்த நூல். சரியாகச் சொல்வதென்றால் அந்த வரலாற்றின் விடுபட்ட பக்கங்களையும் இணைத்து மிக நேர்த்தியாகவும் விரிவாகவும் இந்நூலின் வழி அதன் ஆசிரியர் ஹேமா பேசுகிறார்.…
சிங்கப்பூர் தனிநாடாக மலர்ந்து, அரைநூற்றாண்டு கடந்து, தன் பொன்விழா தேசிய தினத்தை 9 ஆகஸ்ட் 2015இல் கொண்டாடியது. அந்த ஆகஸ்ட் மாதத்தில்தான் ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ மாத இதழும் தன்னம்பிக்கையுடன் ‘சிங்கைத் தமிழரின் சிறப்பு’ என்ற முழக்கவரியுடன் 32 பக்க அச்சிதழாகத் தன் முதலடியை எடுத்து வைத்தது. நான், எம்.கே. குமார், பாரதி மூர்த்தியப்பன் ஆகியோர்…