
தொன்மங்களை (Myths) பொதுவாகக் கற்பனையின் உச்சத்தில் விரித்துரைக்கப்பட்ட கதைகள் என வரையறுத்துக் கூறுவர். காலங்களைக் கடந்து அவை எல்லா சமூகங்களிலும் தொடரப்பட்டு வருவது கண்கூடான ஒன்று. எச்சமயத்தைச் சார்ந்ததாக இருப்பினும் இக்கதைகளில் பொறிக்கப்பட்டிருக்கும் நிகழ்வுகளானது விண்ணுலகம் மற்றும் மண்ணுலகைச் சார்ந்தவையாக பெரும்பாலும் இருக்கும். விண்ணுலக கதைகள் பெருவாறாக கற்பனைக் கதைகள் எனக் கொள்ளப்பட்டாலும், மண்ணுலகம் சார்ந்த…













