“யதார்த்தவாதப் புனைகதைகளுமே மாற்று மெய்ம்மைகள்தாம்!” யுவன் சந்திரசேகர்

யுவன் சந்திரசேகர் தமிழ் நவீன இலக்கியத்தின் தனித்துவமான படைப்பாளி. இன்னும் அதிகமாகத் தமிழ் இலக்கிய வாசகர்களிடம் சென்று சேர வேண்டிய முதன்மையான படைப்பாளி. கவிதை, சிறுகதை, நாவல், குறுங்கதைகள், மொழிப்பெயர்ப்பு என இடையறாது இயங்கும் யுவன் சந்திரசேகர் அவர்கள், நவம்பர் மாதம் மலேசியாவில் நடக்கும் GTLF (ஜார்ட் டவுன் இலக்கிய விழா) நிகழ்ச்சிக்கு சிறப்பு வருகை…

ரசவாதம்

1 கரட்டுப்பட்டியின் முதல் மூன்று குடும்பங்களில் ஒன்று ராமசாமிப் பத்தருடையது. அப்படித்தான் அப்பா சொன்னார். மற்ற இரண்டு, செல்லமுத்துப் பூசாரி குடும்பமும், காவல்கார மூக்கையா மாமாவுடையதும். ஆவலாகக் கதைகேட்கும் பிராயம் எனக்கு. ஆதாரங்களெல்லாம் கேட்கத் தெரியாது. ஆதாரபூர்வமாக முன்வைக்கப்படும் வரலாற்றுச் செய்திகளே நம்பத்தக்கவை அல்ல என்று சொல்கிறவர்களும் உண்டு, அல்லவா! முதல் வாக்கியத்தை என்னிடம் சொல்லவில்லை…

சோழிகளை விசிறும் புனைவுக்கலைஞன்

மேஜிக் தாத்தாவை நான் பயின்ற தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பலருக்கும் தெரியும். என் நண்பனை என்றாவது ஒருநாள் பள்ளிக்குக் காரில் அழைத்து வருபவர். அது சிவப்பு நிறக் கார். பெரும்பாலான ஆசிரியர்களே மோட்டார் சைக்கிளில் வந்த காலத்தில் பளிச்சிடும் அந்தச் சிவப்பு நிறக் காரின் மீதும் முழுமையாக நரையேறிய மேஜிக் தாத்தா மீதும் எங்களுக்குப் பெரிதும் ஈர்ப்பிருந்தது.…

யாதனின் யாதனின் நீங்கினோர் காதை

புதிதாக வந்திருக்கும் சினிமாப் பாடல் வரிகளுக்கான தனியிடத்தை உருவாக்குவதற்காக அனுமதி பெறாமலே பள்ளிக்கூடத்தில் படித்த பாடங்களை அழித்துவிடும் தானியங்கி நினைவாற்றல் தான் என்னுடையது என்றாலும், சில ஆங்கில/தமிழ் செய்யுள்களும் பாடங்களும் எப்படியோ அந்த நினைவாற்றலுக்குத் தப்பி கொஞ்சம் மீதமிருக்கவே செய்கின்றன. அப்படி என் நினைவாற்றலில் தப்பிப் பிழைத்த செய்யுள்களுள் ஒன்று ஷேக்ஸ்பியரின் ‘As You Like…

எம்.யுவன் கவிதைகள்: தீராத ருசி

சொற்களும் அர்த்தங்களும் கிளியென்று சொன்னால் பறவையைக் குறிக்கலாம் பச்சையைக் குறிக்கலாம் மூக்கைக் குறிக்கலாம் பெண்ணைக் குறிக்கலாம். கூண்டுச் சிறையைக் குறிக்கலாம். சமயத்தில் அது கிளியையும் குறிக்கலாம். இப்படித்தான் துவங்குகிறது ‘தீராப்பகல்’ என்ற எம். யுவனின் மொத்தக் கவிதைத் தொகுப்பு. ஆங்கிலத்தில் ‘Absolute’ என்ற சொல்லும் ‘Relative’ என்றவொரு சொல்லும் இருக்கின்றன. முன்னதற்கு ‘அறுதி’ அல்லது ‘துல்லியம்’…

தனியனின் பெருவெளி

புராதனக் கோயில் விமானத்தில்பன்னெடுங்காலமாய் ஒட்டிக்குந்தி வெளிறிய புறாஏனென்றே தெரியாமல்பறந்து செல்ல முனைந்தது.எண்ணற்ற மின்னல்களைஇடிகளை பொழியும் தாரைகளைஓயாமல் உரசும் காலத்தைதாண்டிவந்தபோது இல்லாதஅவசரம் இன்று ஏனோ.கணக்கற்றதூதுப் புறாக்கள்பந்தயப் புறாக்கள்காதல் புறாக்கள்பறந்து கடந்த வானம்மேகத் துணுக்கும் இன்றிவெறிச்சிட்டு இருந்ததுவோகோபுரத்தை நீங்காதுஅழுத்தி வைத்த விசையேதான்மண்ணை நோக்கிஈர்த்ததுவோ,கீழ் நோக்கி உடல்இழுபடும் அதே வேகத்தில்உயரத் துடித்த ஆன்மாவின்உந்துதலோகாலங்காலமாய் ஒடுங்கிவிரிய மறுத்த இறக்கைகளைமீறிமேல்நோக்கி எழும்பிஅல்லாடி அல்லாடிமெல்ல…

ஒரு வட்டம் பல மையங்கள்: குள்ளச் சித்தன் சரித்திரம் நாவலை முன்வைத்து

அன்றைய இரவு, இரவுணவு முடித்துவிட்டு நானும் என் மனைவியும் அடுக்களையை சுத்தம் செய்து கொண்டிருந்தோம். அவள் சிங்க்கில் பாத்திரப்பண்டங்களைத் துலக்கிக்கொண்டிருந்தாள். நான் மேடையை சுத்தம் செய்து கொண்டிருந்தேன். மொழுகி வைத்த மேடையை எந்தத் துணியால் துடைக்க வேண்டும் என்று அவளிடம் கேட்டபோது, பால்கானியில் காயும் நீல கலர் கைப்பிடித்துணி அதை எடுத்துக்கோ என்றாள். நான் பால்கனிக்கு…

சீ. முத்துசாமியின் ஆழம்; ஒரு வாசிப்பனுபவம்

மலேசியாவில் தோட்டப்புற வாழ்வை தீவிரத்தன்மையுடன் எழுதிக்காட்டும் எழுத்தளராக சீ. முத்துசாமி அறியப்படுகின்றார். ஆயினும்,  மக்களின் வெளிப்புற போராட்ட வாழ்க்கையைவிட அகச்சிக்கல்களை கவனப்படுத்துவதையே தனது கலையின் நோக்கமாக அவர் கொண்டிருப்பதை ‘மண்புழுக்கள்’ நாவல் தொடங்கி அறியமுடிகிறது. குச்சிக்காட்டு மக்களின் வாழ்க்கைப் போராட்டங்களைக் காட்சிப்படுத்துவதன் வழி அவர் ஆராய்வது அவர்களின் மனச்சிக்கல்களையே என்பது என் அவதானம். தோட்டக்காடுகளின் இருளையும் அடர்ந்த வனங்களையும் மனித மனங்களின் குறியீடாக அவர் பயன்படுத்திக் கொள்கிறார்.…

சிவானந்தமும் சிங்கப்பூர் இலக்கியமும்

சிங்கப்பூரில் தமிழில் தொடர்ந்து அசராது எழுதுவதற்கான உயிராற்றலைக் கண்டடைந்துள்ள மிகச் சிலரில் சிவானந்தம் நீலகண்டமும் ஒருவர். எழுதப்படும் படைப்புகளை ஒட்டி விரிவான உரையாடல்கள் வாசக சூழலில் எழாவிட்டாலும் ஏறக்குறைய ஆறு ஆண்டுகளாக வாரம் தவறாமல் எழுதி வருபவர். சிங்கப்பூருக்கு அப்பாலும் பரந்த தமிழ் எழுத்துலகில் அறிமுகங்களை ஏற்படுத்திக்கொண்டிருப்பவர். பத்தி எழுத்தாளர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர்கள் சிராங்கூன் டைம்ஸ்…

அரசியல்வாதி

நாடு என்பதை நான் எப்போதும் ஒரு நிர்வாகியின் கீழ் இயங்கும் ரப்பர் தோட்டத்தோடு ஒப்பிட்டு யோசிக்கிறேன். ரப்பர் தோட்டங்களில்  நிர்வாகிக்கு கீழே துணை நிர்வாகி,  கிராணி, தண்டல், தோட்டத் தொழிலாளர்கள், வேலி அமைப்பவர்கள், ஓட்டுனர், குமாஸ்தா, தோட்டிகள், எடுபிடிகள் போன்றவர்களோடு  தோட்ட காவலாளியும் இருப்பார். நாட்டில்,  அரசியல்வாதிகள்தான் அந்த நிர்வாகியும் துணை நிர்வாகியும். அரசாங்க ஊழியர்களைக்…

விண்ணிலிருந்து வீழ்ந்த பெண்

அவன் மாஹ்டை சந்தித்து இருபது வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அவர்கள் சாத்தேவுக்குப் பேர்போன சிறு நகரமான காஜாங்கில் ஒன்றாகப் படித்தார்கள். ஆனால், அவர்கள் ஒரே பள்ளியில் படிக்கவில்லை. அவன் ஒரு பள்ளியில் படித்தான். மாஹ்ட் வேறு பள்ளியில் படித்தான். ஆனால், ஒவ்வொரு நாளும் பள்ளி விட்டு திரும்பும்போது பேருந்து நிலையத்தில் கட்டாயம் சந்தித்துக் கொள்வார்கள். அப்போது…

இழிந்த வீடு

தாமான் பாயு குடியிருப்பின் வயதைச், சாயம் மங்கிப்போன வீட்டுக்கூரையும் சுவருமே சொல்லும். அசல் வண்ணத்தைக் கண்டறியவே  முடியாத வகையில் கூரையிலும் சுவரிலும் பலமுறை சாயம் பூசப்பட்டுப்  பல நிறங்களில் திட்டுகள் காணப்படுகின்றன.  ஒவ்வொரு வீட்டுச் சாயமும் ஒருவிதமாக இருக்கின்றன. அவையும் சீராக இல்லாமல் மங்கியும் உதிர்ந்தும் கிடந்தன. கதிரொளியும் மழையும் பட்டு வீட்டுச் சுவர்களின் சாயம்…

திரையில் அசையும் காட்சிகள்

நேற்று மீண்டும் கியுசேப்பே தோர்னதோவின் ‘சினிமா பாரடைசோ’ படத்தை ஓடவிட்டு அதில் வரும் டோடோவுக்கும் அல்ப்ரெடோவுக்குமிடையிலான தனித்துவமான உறவைப் பார்த்தேன். கனவுகள் மிகுந்த தன் கைக்கெட்டாத பால்யத்தை நினைத்துக் கொள்ளும் வளர்ந்த ஆணின் நினைவேக்கக் கதை. அத்தகைய நினைவேக்கம் எல்லாருக்கும் உண்டு. எனக்கும் கூட அம்மாதிரியான நினைவேக்கம் உண்டு. பால்யத்தில் தங்களுக்கு எட்டாத வாழ்வைப் பெற…

சாலையோர விதைகள்

விடுதியின் ஜன்னலிலிருந்து எந்தவொரு காட்சியையும் பார்க்கவிடாமல் தடுத்துக் கொண்டிருந்த அந்த மதிலையே பார்த்துக் கொண்டிருந்தேன். மொரமொரப்பான சிமெண்ட் பூசி எழுப்பப்பட்ட சுவர் செங்கற்கள், தனித்தனி அறைகளில் அடைந்து கிடக்கும் விடுதிவாசிகளையே ஞாபகப்படுத்தியது. உறுதியான சிறைகளுக்குள் நேராக அடுக்கப்பட்ட கூண்டுகளைப் போன்ற அறையில் பிரித்து வைக்கப்பட்டுள்ள விடுதிவாசிகளைப் போலவே இருந்தது சுவர். நான் ஏதோ ஒரு சிறையில்,…

பச்சை நாயகி

நேபாள் என்றாலே எனக்குப் புத்தர்தான் நினைவுக்கு வருவார். நேபாளத்தில் புத்தர் பிறந்த இடம் லும்பினி. லும்பினி அதற்கு மட்டும் பிரபலம் அல்ல. பல நாட்டு புத்த நிறுவனங்களால் நிதியளிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட பௌத்த மடாலயங்கள் லும்பினியில் உள்ளன. அங்குச் சென்றால், ஒவ்வொரு நாட்டிலும் பௌத்த மத வழிபாடுகள் எவ்வாறு கடைபிடிக்கப்படுகின்றன என்பதைக் காணலாம். பெரும்பாலோர் புத்தர் வழிபாடு…