
பள்ளிப் பருவத்தினின்றே தமிழ்ப்பாடம் என்றால் அலாதிப் பிரியம்தான் எனக்கு. அதிலும் சிலப்பதிகாரம் குறித்த ஆர்வம் எனக்குள் அதிகரித்தது கல்லூரிப்பருவத்தில் தான். அதற்குக் காரணம், சிலப்பதிகாரக் காப்பியத்திற்கும் எங்கள் பகுதிக்கும் உள்ள தொடர்பைக் கேள்விப்பட்டதுதான். மேலும், பேராசிரியர் சி.கோவிந்தராசனார் எழுதிய ‘கண்ணகி அடிச்சுவட்டில்’ என்ற நூலும், கண்ணகிக்கோட்டம் கண்டறியப்பட்டபோது அங்கு மண்டிக்கிடந்த புதர்களை அகற்றும் குழுவில் வேலைக்குச்…


















