“எல்லா இலக்கியமும் அறம் என்னும் மாபெரும் மதிப்பீட்டை வலியுறுத்தவும் நிலைநிறுத்தவும் எழுதப்படுபவையே” – பாவண்ணன்

பாவண்ணன் சமகால  நவீனத் தமிழ் இலக்கியச்சூழலில்முதன்மையான படைப்பாளிகளில் ஒருவர். சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு, கட்டுரைகள்எனஇடையறாதுதமதுபங்களிப்பைஅளித்துவருகிறார். கன்னடத்திலிருந்து தலித் இலக்கியங்களை மொழியாக்கம் செய்து தமிழ் தலித் இலக்கிய அலை உருவாக அடிப்படைகளை அமைத்தவர்களில் ஒருவர். மொழிபெயர்ப்புக்காக இந்திய மத்திய அரசின் சாகித்திய அகாதமியின் விருது,  தமிழ் இலக்கியத் தோட்டத்தின் (கனடா)  வாழ்நாள் சாதனைக்கான இயல்  விருது , விளக்கு…

“சலனமின்மையை எதிர்வினையாகப் போர்த்தியிருக்கும் மனத்தைப் புனைவுகளில் நிகழ்த்திப் பார்க்கிறேன்” – அரவின் குமார்

அரவின் குமார் மலேசிய நவீனத் தமிழ் இலக்கியத்தில்  சிறந்து விளங்கும் புதிய தலைமுறை எழுத்தாளர். சிறுகதைகள், கட்டுரை, விமர்சனக் கட்டுரை, இலக்கியச் செயல்பாடுகள் என இடையறாது இயங்கி வருகிறார். செறிவான மொழி, தர்க்கப்பூர்வமான பார்வை, கச்சிதமான மொழிநடை, கற்பனையாற்றல் போன்ற கூறுகள் இவரின் எழுத்தின் பலம். இவ்வருடத்திற்கான வல்லினம் இளம் தலைமுறையினர் விருது அரவின் குமார்…

நிலமும் துயரமும் மனிதர்களும் – அரவின் குமாரின் கதைகள்

புதியவர்கள் எழுதும் கதைகளைப் படிக்கும்போது நாமறிந்த, வாசித்த புனைவுலகில் சில புதிய அனுபவங்களும் தருணங்களும் சேர்ந்துகொள்கின்றன என்பதால் புதிய எழுத்தாளர்களை வாசிப்பதில் ஆர்வமுண்டு. அந்த எழுத்தாளர் யார் என்ற எந்த அறிமுகமுமின்றி நேரடியாக கதைகளை அணுகி வாசிக்கும் வாய்ப்பை இணைய இதழ்கள் அளிக்கின்றன. புதிய பல இளம் எழுத்தாளர்களை இணைய இதழ்களின் வழியாகத்தான் அறிய முடிகிறது.…

சிண்டாய்: நிலத்தை மென்று வளர்ந்த தளிர்

மலேசியாவில் வளர்ந்து வரும் இளம் படைப்பாளிகளில் முதன்மையானவர் என்று அரவின் குமாரைச் சொல்லலாம். இவ்வாண்டின் வல்லினம் இளம் எழுத்தாளருக்கான விருது அவருக்கு வழங்கப்படுவது அதற்கான அங்கீகாரம்.  இவ்விருதை ஒட்டி வெளிவரும் ‘சிண்டாய்’ எனும் சிறுகதை தொகுப்பின் வழியாக அவரை மீள் வாசிப்பு செய்தபோது அரவின் குமாரின் புனைவுலகை மேலும் நெருங்கிச் செல்ல முடிந்தது.    தோட்டப்புற…

பாவண்ணன் சிறுகதைகள்: எளிமையின் கலை

உலகில் பத்தாவது உயரிய மலையான அன்னபூர்ணா அடிவாரம் வரை கடந்த ஆண்டு ஏறியபோது முதல் மூன்று நாட்கள் அது கடுமையான பயணமாகவே அமைந்தது. நான்காவது நாள் அதிகாலை பயணம் பனிபடர்ந்த அன்னபூரணியைத் தரிசித்துக் கொண்டே நகரும் அனுபவம். முதல் மூன்று நாட்களைப் போல நான்காவது நாள் பயணத்தில் எங்குமே கற்படிக்கட்டுகள் இல்லை. செங்குத்தான மேடுகள் இல்லை.…

வடசேரிக்கரை தேவன்

கால்களில் கட்டப்பட்டிருந்த சங்கிலியை உலுக்கி ஓசை எழுப்ப ஆரம்பித்தான் தேவன். பனி மூடியிருந்த அமைதியான விடியற்காலையில் அந்தச் சங்கிலியின் ஓசையால் தடால் என எழுந்தமர்ந்த பாப்பியம்மாள், “ஞான் வருந்நு, எனிக்கி கொறச்சு ஒறங்ஙான் சமயந்தாடோ,” என்று கூறி மீண்டும் உறங்க முயற்சித்தாள். ஆனால், பாப்பியம்மாவைத் தேவன் விடுவதாகத் தெரியவில்லை. “ஹூம்ம், இவன் என்னெ ஒறங்கான் விடில்லா,”…

இரண்டாம் துணை

அவனுக்கு இன்னமும் ஞாபகமிருக்கிறது, அக்டோபர் மாதத்தின் தொடக்க நாளான அன்று, கிழக்கில் தாழ்வாக உதிக்கும் சூரியனின் வெப்பக் கதிர்கள் அந்த இரட்டை மாடி வீட்டின் இரண்டாம் தளத்தின் மாடத்தைக் கடந்து அவனது படுக்கையறை கதவு வரை நீண்டு கிடந்தது.  வழக்கமாக காலை கதிரவனின் வெளிச்சம் மாடத்தின் பாதி வரை வந்து விழும். அது இயல்பானதுதான். ஆனால்,…

ஆடும் தேவி

துணுக்குற்று கண் விழித்த பொழுது, உடலில் மின்சாரம் பாய்வது போன்ற உணர்வு. மிக உயரமான கட்டடத்திலிருந்து விழுந்ததால் அவ்வுணர்ச்சி ஏற்பட்டிருக்கலாம். கனவுதான். ஆனால், உணர்ச்சி நிஜமானது. ஸ்வேதா தற்கொலை செய்து கொண்டது முதல் இப்படியான கனவுகள்தான் மூன்று மாதங்களாக வருகின்றன. ஆனால், மதிய நேரத்தின் இடைவெளி உறக்கத்திலும் இப்படியான கனவு வருவது வியப்புதான். உதட்டின் ஓரத்தில்…

நெடிய பயணம்

இன்றைய தினம் சீக்கிரம் முடிவடைந்தால் போதும் என்று இருந்தது. அப்பா முன் தினமே நன்றாக குடித்திருந்தார். அவர் அருகே அதன் நெடி காலையிலும் வீசியது. வழக்கத்துக்கு மாறாக காலையிலேயே குளித்து நெற்றி நிறைய திருநீறு பூசி இருந்தார். எப்போதும் இல்லாத அவருடைய இன்முகம் எனக்கும் அக்காவுக்கும் எரிச்சல் ஊட்டியது. தாங்கவே முடியாத இன்றைய தினத்துடன் மல்லுக்கட்ட…

பிரபஞ்ச நடனம்

கூகிள் மேப் செயலியில் மீண்டும் ஒரு முறை சோதனை செய்தேன். நான் வந்திருப்பது சரியான இடம்தான் என அது சொல்லியது. ஆனால், என் முன்னே சாலை நிறைவடைந்து பாலையின் மணல் மேடுதான் இருந்தது. பார்வைக்குச் சாலை மணலினுள் புதைந்திருப்பது போல காட்சியளிக்கவே நான் காரிலிருந்து இறங்கி மணல் மேட்டின் மேலேறிப் பார்த்தேன். சுற்றிலும் இருள். கண்ணுக்கு…

“இந்த விருதினால் எனது வாழ்வில் எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை” ஹான் காங்

இந்த ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்று, உலக அரங்கில் கொரிய எழுத்தாளர்களின் வளமான கதைகளின் மீது கவனத்தை ஏற்படுத்தியுள்ளார் 54 வயது தென் கொரிய எழுத்தாளர் ஹான் காங் (Han Kang). இலக்கிய உலகம் மிகப் பரந்தது. நோபல் விருது போன்ற அனைத்துலக அங்கீகாரங்கள் உலகின் எல்லா மூலைகளுக்கும் இலக்கிய ஆளுமைகளை அறிமுகப்படுத்துகின்றன.   இவ்வாண்டு…