
மோப்பம் பிடித்தபடி கண் முன்னே திரிந்து கொண்டிருந்தவன், எதிர்வீட்டு வாயிற் கதவோரம் எப்போது காலைத் தூக்கினான் என்றே தெரியவில்லை. காலணி ஒன்று பறந்து வந்து இரும்புக் கதவில் மோதி எழுப்பிய சத்தத்தில் சிறுநீர் கழிப்பதை நிறுத்திவிட்டு ஓரடி பின் வாங்கி குரைத்தான். பின்னர் முன் கால்களை படுக்கவைத்து பிட்டத்தை தூக்கியபடி காலணியைப் பார்த்து வாலை ஆட்டத்தொடங்கினான்.…


















