கலை பண்பாடு ஆவணமாக்கல்

1 சமீபத்தில் தமிழ்நாட்டில் நிகழ்ந்த மிகப்பெரிய கலைபண்பாடு ஆவணமாக்கல் என கீழடி அருங்காட்சியகத்தையும் பொருநை அருங்காட்சியகத்தையும் சொல்லலாம். கடந்த பொங்கல் திருவிழாவின்போது பொருநை அருங்காட்சியகம் சென்றிருந்தேன். பெருந்திரளான மக்கள் கூட்டம் அங்கு அந்த நாளில் இருந்ததைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. சென்னை போன்ற பெருநகரங்களில் மால்களில் மட்டுமே இத்தகைய கூட்ட நெரிசலைப் பார்க்க முடியும். ஒரு…

புதுமைப்பித்தன்: அசாதாராண கலகக்காரன்

30. 09. 1953 தமிழ் முரசு நாளிதழில், ‘இலக்கிய மேதை யார்?’ என்ற தலைப்பில் எழுத்தாளர் வீ.க. சபாபதி  ஒரு கட்டுரை எழுதினார். ‘விபரீத ஆசை’ என்ற புதுமைப்பித்தனின் சிறுகதையை வாசித்த அவருக்கு இத்தலைப்பில் ஒரு கட்டுரை எழுத உந்தியிருக்கிறது. புதுமைப்பித்தனின் எழுத்து மலாயாவிலும் சிங்கப்பூரிலும் அப்போதெல்லாம் அரிதாகவே வாசிக்கக் கிடைத்திருந்தாலும், கதையில் வீ.க. சபாபதி…

நாடு விட்டு நாடு: தனிமனிதக் கதையில் சமூக ஆவணம்

20-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை மலாயாவில் இருந்த ரப்பர் தோட்ட பொருளாதாரம், பெருமளவில் இந்தியத் தொழிலாளர்களின் உழைப்பைச் சார்ந்திருந்தது. பிரித்தானிய காலனிய ஆட்சிக்காலத்தில் தமிழர்கள் மலாயாவிற்கு இடம்பெயர்ந்ததற்கான சமூக-பொருளாதாரக் காரணங்கள், ரப்பர் தோட்டங்களில் அவர்கள் செய்த வேலை, உழைப்பின் தன்மை, கூலி, வாழ்வாதாரம், அச்சூழலின் நீண்டகாலச் சமூக விளைவுகள் தொழிலாளர்களை எவ்வாறு பொருளாதார மற்றும் சமூக…

கார்த்திக் திலகன் கவிதைகள் 

மீளமுடியாத சொர்க்கம்  மண்ணில் இருக்கும் பாதைகள் ரோஜா இருக்கும் இடத்திற்கு நம்மை கூட்டிச் செல்லும்  காற்றில் இருக்கும் வண்டின் பாதைகளோ நம்மை ரோஜாவிடமே கூட்டிச்செல்லும்  இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது  பல நூற்றாண்டுகள் பழமையான அந்த பாதையில் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் ரோஜா மெல்ல அதிர்கிறது அருகில் சென்று நாம் அதை தொடும்போது அது…

தமிழாசியா சந்திப்பு: சுஜாதா சிறுகதைகள்

இன்றைய தமிழாசியாவின் சந்திப்பு அமர்வில் , எழுத்தாளர் சுஜாதா அவர்களின் சிறுகதைகள் குறித்து பேசப்பட்டது . பொதுவாக, அவர் வணிக எழுத்தாளர், அவரது எழுத்துக்களில் எவ்விதமான ஆழமோ அடர்த்தியோ இருக்காது என்ற விமர்சனங்கள் நம் செவி கேட்டிருக்கும். நவீன எழுத்தாளர்களின் ஒட்டு மொத்த எண்ணம் அதுவாக இருக்கலாம். ஆம் அவர் வணிக எழுத்தாளர் தான். ஆனால்,…

முன்னோடிகளின் வரிசையில்

2026 ஜனவரி தமிழாசியா சந்திப்பில் தமிழ்ச் சிறுகதை முன்னோடிகளின் வரிசையில் எழுத்தாளர் கிருஷ்ணன் நம்பி மற்றும் இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர்களான வ. ராசரத்தினம் மற்றும் தெளிவத்தை ஜோசப் ஆகியோரின் சிறுகதைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. மூன்றாம் ஆண்டாகத் தொடரும் தமிழாசியா சந்திப்பில் சிறுகதைகள் குறித்து முன்வைக்கப்படும் வாசகப் பார்வையின் மீதும் காத்திரமான விமர்சனப் பார்வை முன்வைக்கப்படுவது அவசியமென…

பழம்பாறை (அறிவியல் சிறுகதை)

( 1 ) கவனி, என் குரலைக் கவனி. என் குரல் என்பது உண்மையில் குரல் அல்ல, அது இன்னொன்று. ஒரு மூளை இன்னொரு மூளையை தொடர்பு கொள்வதற்கான எல்லா வழிமுறைகளிலும் இதை அறியமுடியும். ஒரு மூளையின் மிகச்சிறந்த அல்லது மிக இயல்பான வழிமுறை எதுவோ அதன் வழியாக இது தன்னை தொடர்புறுத்தத் தொடங்கும். இதை…

மெய்போலுமே மெய்போலுமே

2019-இல் நான் வல்லினத்தில் ‘தையும் பொய்யும்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினேன். பிறகு 2021-இல் மலேசிய தமிழ்ச்சூழலில் நடந்த சில அதீத செயல்பாடுகள் காரணமாக அக்கட்டுரையை மீள் பார்வைக்குக் கொண்டுவந்தேன். அக்கட்டுரையின் மைய கருத்து, பொதுவாக தைப்புத்தாண்டு எனும் கருத்தைப் பரப்பும் தரப்பினர் தங்கள் முதன்மை ஆதாரமாக முன்வைக்கும் ‘மறைமலையடிகளின் தலைமையில் 1921ஆம் ஆண்டு,…

மேன்மகன் மூர்த்தி

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் 21-12-25 ஞாயிறு அன்று நடைபெற்ற ‘வல்லினம் விருது’ வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றேன்.  ஆசிரியராக இருந்து பின்னர் தேர்வுத்துறை அதிகாரியாகப் பணியாற்றிய காலத்தில் மலேசியத் தமிழ்ப் பள்ளிப் பாடத்திலும் தேர்வுமுறைகளிலும் மாற்றங்களைக் கொண்டு வந்ததோடு நவீன இலக்கிய விழிப்பைக் கல்விக்குள் உண்டாக்கிய பி. எம். மூர்த்தி அவர்கள் இவ்வாண்டு விருதுக்குரியவர்.…

ஜார்ஜ்புஷ்ஷும் வட்டப்பேரும்

வாசலுக்குள் நுழைந்து அரசமரத்தைக் கடந்து செல்ல, கிளையில் இருந்து குதித்து வந்து மண்டைஓடு கூவினான், “லேய் வாத்து, நேத்து ஏம்பில வரல?”  “ஊர்ல இல்லல. நேத்துதான் வந்தேன்”, என் பதிலை அவன் கவனித்ததாக தெரியவில்லை.  “ஏறிச்சாடி விளாட வாரியா?”, மண்டைஓடு புதிதாக ஒரு விளையாட்டை கண்டுபிடித்துவிட்ட உற்சாகத்தில் இருந்தான்.  அவன் கண்கள் இரண்டும் விரிந்து வட்டமாக,…

தி. அலியாஸ் தைப்பின் உதடுகள்

எங்கள் கட்டுப்பாட்டாளர் அலுவலகத்துக்கு அந்த அழைப்பு திடீரெனதான் வந்தது எனலாம். “பிரபல கவிஞர் தி. அலியாஸ் தைப்பின் உதடுகளை விளம்பரப்படுத்தலாமென்று இருக்கிறேன்.” எங்கள் அலுவலகத்தில் ஒருவருக்குக் கூட தி. அலியாஸ் தைப் யாரெனத் தெரிந்திருக்கவில்லை. மேலும், அவரைத் தெரிந்து வைத்திருப்பது ஒரு தொலைப்பேசி எண்கள் அடைவு நிறுவனத்திற்கு அவ்வளவு முக்கிய பணியுமில்லை. விளம்பரம் தொடர்பான தகவல்களைச்…