முதல் எழுத்து இலக்கிய விழா – இலக்கியப் பட்டறை

மலேசிய கலை இலக்கியச் சூழலில் பல்வேறு தளங்களிலும் தனது பங்களிப்பை வழங்கி வருகிறது வல்லினம். மூத்த எழுத்தாளர்களை விருது வழங்கி அங்கீகரிக்கும் அதே சமயத்தில் அவர்களது பங்களிப்பை ஆவணப்படங்கள் வழியாகப் பதிவு செய்தும் வருகிறது. அதே போல சமகால எழுத்தாளர்களின் ஆக்கங்களை வல்லினம் இதழ் வழியாக வெளியிட்டும் நூல்களைப் பதிப்பித்தும் வருகிறது. இதுதவிர, வல்லினத்தின் முதன்மையான…

டோன் கனவில் கண்ட இல்லறம்

தனக்கு ஒரு குடும்பம் இருப்பதைத் தான் கனவில் கண்டதாக டோன் என்னிடம் சொன்னபோது, என் கவனம் கீழே உள்ள பிரதான சாலையில் வரிசையாய் நின்றிருந்த வாகனங்களின் மீது படிந்தது. உண்மையில் சாலையின் ஓர நெரிசலில் அவசர அவசரமாகச் சென்ற பாதசாரிகள் மீதுதான் என் கவனம் அதிகம் ஈர்க்கப்பட்டது. அவர்களில் பெரும்பாலோர் அலுவலக உடையில் இருந்தனர். கருமேகத்…

பனிக்குடில்

இறைச்சி பொட்டலத்தை இறுக மூடியிருந்த பனிக்கட்டிகளை மர்சுகி கவனக்குறைவாக உடைத்ததனால் அவன் வீட்டிலிருந்த சிறிய குளிர்சாதனப் பெட்டி பழுதடைந்துவிட்டது. அவனது மனைவி அலுவலகத்திலிருந்து திரும்பும் வரை, மர்சுகி அப்பழுதைப் பற்றி அவளிடம் எதுவும் சொல்லவில்லை. ஒரு கையில் சுத்தியலையும் மறு கையில் பழத்தோல் சீவும் கத்தியையும் பிடித்தவாறு அக்குளிர்சாதனப் பெட்டியின்முன் மல்லாந்து படுத்துக்கிடந்தான். அவனது பார்வை…

அப்பா  தற்கொலை செய்து இறந்தார்

கடைசியில் அப்பா தற்கொலை செய்து இறந்துவிட்டார். அதிகாலை தொழுகை நேரத்தில், குளிர்ந்து விறைத்துப் போன அப்பாவின் உடல் வரவேற்பறையில் கிடந்ததாக அம்மா சொன்னார்.  அப்பா இயற்கையான இருதயக் கோளாறாலோ உயர் இரத்த அழுத்தத் தாக்குதலாலோ உயிரிழந்திருக்க சாத்தியமே இல்லை. ஏனென்றால் அப்பா எப்போதும்  ஆரோக்கியமாகத்தான் இருந்தார். மருத்துவர்களும் அதை உறுதிப்படுத்தியதாக அம்மா தின்னமாகக் கூறினார். “உங்களுடைய…

பெண்களின் நாட்டியம்

“ஒருவேளை நான் சிறைப்படுத்தப்பட்டாலோ அல்லது தோக் ஜங்கூட் போல  மெர்டேக்கா திடலில் தூக்கிலிடப்பட்டாலோ, நான் அவளை மிகவும் நேசிப்பதாக என் அம்மாவிடம் சொல்லிவிடனும் தெரியுமா.” மாவார் சிரித்துக் கொண்டே என்னைப் பார்த்து ஒருவாறு கண் சிமிட்டினாள். அவளால் இந்தச் சூழலையும் இவ்வளவு இயல்பாக எடுத்துக் கொள்ள முடிந்தது. கிறுக்கு குணம் கொண்ட பெண்.  அங்கு இருந்தவர்களின்…

மூன்று பெண்களின் உரையாடல்

மனம் வெறித்துக் கிடக்கிறது, ஆன்மாவும் சூன்யமாகிப் போயிருக்கிறது, உடல் தளர்ந்து சரிகிறது. தளர்வு என்பது சரியான விளக்கம் அல்ல, இது உண்மையில் அதையும் கடந்தது. இந்த இடத்தில் காலெடுத்து வைப்பேன் என்று கனவிலும் நினைத்திருக்கவில்லை.  சபிக்கப்பட்ட இந்த இடத்தை வேலை முடிந்து திரும்பும் வழியில் பல சமயம் கவனிக்காமல் கடந்திருக்கிறேன். வாழ்வின் இந்தக் கரும்புள்ளியை நான்…

மொழியும் சொல்லும்

கடந்த இரண்டு ஆண்டுகளாக மலாய் சிறுகதைகளை தமிழுக்கு மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறேன். நண்பர்களின் மொழிபெயர்ப்புகளை செம்மையாக்கமும் செய்கிறேன். அந்த வகையில் மொழி சார்ந்து பெற்ற அனுபவங்கள் முக்கியமானவை. சுவாரஸ்யமானவையும் கூட. ஆகவே, அவற்றை பதிவு செய்து வைப்பது அவசியம் என்று நினைக்கிறேன். எறும்பும் தன் கையால் எண் சாண் என்பது போல எல்லா மொழியும்…

பேங்கோ

“விண்மீன்களே உங்கள் ஒளியை ஒளித்து வையுங்கள். அவை எனது ஆழத்து இருண்ட இச்சைகளின் மீது ஒளிபாய்ச்சாமல் இருக்கட்டும்” இருள் மண்டியிருந்த மேடையில் முகத்தில் வட்ட மின் விளக்கின் ஒளி விழ, நீல நிழல் தரையில் படர, மெக்பெத் தனித்து தனது மன குரளுக்குச் செவி சாய்த்தபடி நின்றிருந்தான்.  நாடகம் தொடங்கி ஏழெட்டு நிமிடங்கள் ஆகியிருக்கலாம். என்னையும்…

சுழலும் ஆழி

குளிர் காதுகளை அடைத்தது. இன்னும் சூரியன் வெளிச்சம் காட்டவில்லை. பேருந்து மெதுவாக பச்சை மலை குன்றுகள் சிதறிக்கிடக்கும் பாதையில் நகர்ந்து கொண்டிருந்தது. மரவட்டை நகர்வது மாதிரி நிலம் மெதுமெதுவாக மேடேறும் பாதை. ஒக்கரை குன்றடி சிற்பக்கூடங்களில் உளிகளின் சத்தங்கள் கலைந்து கேட்கிறது. “ஒக்கரை வந்துருச்சு…” என்று நடத்துனர் உறங்குபவர்களை எழுப்பினார். அருகில் உறங்கிக்கொண்டிருந்த பிரதிக்ஷாவை சேலை…

நச்சுப்புன்னகை

விழித்ததிலிருந்து வரிசைக் கிரமம் குலையாமல் அனைத்தும் நடந்திருந்தபோதிலும் அவற்றின் கூட்டுத்தொகையென எஞ்சிய உணர்வில் புதுமை சாயம் அப்பிக்கிடப்பதை உணர்ந்தான் முருகேசன். எதிர்புறம் இருந்த கண்ணாடியில் முகம் பார்த்துவிட்டு மீண்டும் சாலையைப் பார்த்தபோது என்றைக்கும் இல்லாத அளவிற்கு எழில் நாடி மேய்ந்தன விழிகள். கதகதப்பூட்டும் வண்ணங்களையும், பரபரத்தோடும் மக்களிடம் வெளிப்பட்ட உயிர்ப்பையும் கவனித்தபோது புறங்கழுத்தில் துவங்கி அடிமுதுகுவரை…

பெருமுலை

இரவு விமானத்தில் அமர்ந்தவாறு உறங்க முயன்றதனால் இடையும், தோள்களும் இறுகி வலியெடுத்தன. குதிகால்களில் நின்றவாறு இடது காலை மடித்து வலது காலையும், கைகளையும் நீட்டி சோம்பல் முறித்து கொட்டாவி விடுகையில் அவள் பெயர் ஒலிக்கக் கேட்டு திரும்பி அலாஸ்கா விமானத்தின் அலுவலகத்தை நோக்கிச் சென்றாள். “பை வந்துவிட்டதா?” என்றபடி அருகே சென்று நின்றாள். மங்கலான விளக்கு…

கலை பண்பாடு ஆவணமாக்கல்

1 சமீபத்தில் தமிழ்நாட்டில் நிகழ்ந்த மிகப்பெரிய கலைபண்பாடு ஆவணமாக்கல் என கீழடி அருங்காட்சியகத்தையும் பொருநை அருங்காட்சியகத்தையும் சொல்லலாம். கடந்த பொங்கல் திருவிழாவின்போது பொருநை அருங்காட்சியகம் சென்றிருந்தேன். பெருந்திரளான மக்கள் கூட்டம் அங்கு அந்த நாளில் இருந்ததைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. சென்னை போன்ற பெருநகரங்களில் மால்களில் மட்டுமே இத்தகைய கூட்ட நெரிசலைப் பார்க்க முடியும். ஒரு…

புதுமைப்பித்தன்: அசாதாராண கலகக்காரன்

30. 09. 1953 தமிழ் முரசு நாளிதழில், ‘இலக்கிய மேதை யார்?’ என்ற தலைப்பில் எழுத்தாளர் வீ.க. சபாபதி  ஒரு கட்டுரை எழுதினார். ‘விபரீத ஆசை’ என்ற புதுமைப்பித்தனின் சிறுகதையை வாசித்த அவருக்கு இத்தலைப்பில் ஒரு கட்டுரை எழுத உந்தியிருக்கிறது. புதுமைப்பித்தனின் எழுத்து மலாயாவிலும் சிங்கப்பூரிலும் அப்போதெல்லாம் அரிதாகவே வாசிக்கக் கிடைத்திருந்தாலும், கதையில் வீ.க. சபாபதி…

நாடு விட்டு நாடு: தனிமனிதக் கதையில் சமூக ஆவணம்

20-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை மலாயாவில் இருந்த ரப்பர் தோட்ட பொருளாதாரம், பெருமளவில் இந்தியத் தொழிலாளர்களின் உழைப்பைச் சார்ந்திருந்தது. பிரித்தானிய காலனிய ஆட்சிக்காலத்தில் தமிழர்கள் மலாயாவிற்கு இடம்பெயர்ந்ததற்கான சமூக-பொருளாதாரக் காரணங்கள், ரப்பர் தோட்டங்களில் அவர்கள் செய்த வேலை, உழைப்பின் தன்மை, கூலி, வாழ்வாதாரம், அச்சூழலின் நீண்டகாலச் சமூக விளைவுகள் தொழிலாளர்களை எவ்வாறு பொருளாதார மற்றும் சமூக…

கார்த்திக் திலகன் கவிதைகள் 

மீளமுடியாத சொர்க்கம்  மண்ணில் இருக்கும் பாதைகள் ரோஜா இருக்கும் இடத்திற்கு நம்மை கூட்டிச் செல்லும்  காற்றில் இருக்கும் வண்டின் பாதைகளோ நம்மை ரோஜாவிடமே கூட்டிச்செல்லும்  இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது  பல நூற்றாண்டுகள் பழமையான அந்த பாதையில் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் ரோஜா மெல்ல அதிர்கிறது அருகில் சென்று நாம் அதை தொடும்போது அது…

தமிழாசியா சந்திப்பு: சுஜாதா சிறுகதைகள்

இன்றைய தமிழாசியாவின் சந்திப்பு அமர்வில் , எழுத்தாளர் சுஜாதா அவர்களின் சிறுகதைகள் குறித்து பேசப்பட்டது . பொதுவாக, அவர் வணிக எழுத்தாளர், அவரது எழுத்துக்களில் எவ்விதமான ஆழமோ அடர்த்தியோ இருக்காது என்ற விமர்சனங்கள் நம் செவி கேட்டிருக்கும். நவீன எழுத்தாளர்களின் ஒட்டு மொத்த எண்ணம் அதுவாக இருக்கலாம். ஆம் அவர் வணிக எழுத்தாளர் தான். ஆனால்,…

முன்னோடிகளின் வரிசையில்

2026 ஜனவரி தமிழாசியா சந்திப்பில் தமிழ்ச் சிறுகதை முன்னோடிகளின் வரிசையில் எழுத்தாளர் கிருஷ்ணன் நம்பி மற்றும் இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர்களான வ. ராசரத்தினம் மற்றும் தெளிவத்தை ஜோசப் ஆகியோரின் சிறுகதைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. மூன்றாம் ஆண்டாகத் தொடரும் தமிழாசியா சந்திப்பில் சிறுகதைகள் குறித்து முன்வைக்கப்படும் வாசகப் பார்வையின் மீதும் காத்திரமான விமர்சனப் பார்வை முன்வைக்கப்படுவது அவசியமென…