நாஞ்சில் நாடன் பதில்கள்

nanjil-nadan

இந்தியச் சூழலில், குறிப்பாகத் தமிழ்ச்சூழலில், நாட்டார் கலை வளர்ச்சி என்பது ஒருவகையில் மறைவாக இருந்த சாதிய மேட்டிமைகளை, பெருமிதங்களை பொதுவில் வெளிப்படுத்த வழிவகுத்தது என்னும் கருத்து குறித்த உங்கள் பார்வை என்ன? மாரி முருகன் மற்ற எக்காலத்தை விடவும் சாதியம் இன்று முனைப்பாக அல்லவா இருக்கிறது? இதற்கு அரசியல் தலைவர்களும், சாதி அரசியல் நடத்தும் அரசியல்.…

சென்னை புத்தகக் கண்காட்சியில் வல்லினம் நூல்கள்

m

6.1.2017 – இல் நடைபெறும் சென்னை புத்தகக் கண்காட்சியில் வல்லினம் குழுவினர் கலந்துகொள்வர். வல்லினம் பதிப்பித்த நூல்களை புலம் புத்தக அரங்கில் வாங்கலாம்.

இனவரைவியல் நோக்கில் சிறுமலைப் பளியர்

prabhu-7

இந்தியாவில் காணப்படும் பல்வேறு இனக்குழுக்களில், பழங்குடியினரின் எண்ணிக்கை குறைவுதான். தனித்த அடையாளங்களும், மற்றவர்களிடமிருந்து தங்களைத் தனிமைப்படுத்தி வாழும் குணமும் இப்பழங்குடியின மக்களுக்குண்டு. இந்திய விடுதலைக்கு முன்னும் பின்னும் பெரும்பகுதி நேரடி அரசியல் அதிகாரத்திற்கு உட்படாமலேயே இவர்கள் வாழ்ந்துவருகின்றனர். மேலும், அண்மைக்காலம்வரை இவர்களில் விரல்விட்டு எண்ணக்கூடியவர்களே கல்விகற்றவர்களாக அறியப்படுகின்றனர். இவர்களது வாழிடம், பண்பாட்டுக் கூறுகள் போன்றவை, மற்ற…

உயிர்க்காடு

kumar-3

ரானே திகைத்தான். என்ன செய்வதென்று எதுவும் புரியவில்லை. தலையை பெரிய உருளைக்குள்ளே விட்டு மாட்டிக்கொண்டது போல உடலும் மனமும் வலித்துக்கிடந்தன. இந்தநாள், நல்ல நாளாக விடியவில்லை. லேசாகத் தூறிக்கொண்டிருந்த வானம், மென்புழுக்கத்தை ஏற்றியதும் வியர்வையும் அதிகமாகியது. ‘எப்படி இதைச் சரிசெய்யப்போகிறோனோ’ என்று மிகவும் பதட்டமானான். மனதின் உள்ளுக்குள் ஒரு சுடுநீராவிக்குடிலுக்குள் அமர்ந்துள்ளது போலிருக்க, ’நான் யாருக்கும்…

மலேசிய சீன இலக்கியம் : ஒரு சிறுகதைத் தொகுப்பினூடாக அறிமுகம்

ganga-1

மலேசியாவில் பல்வேறு மொழிகளிலும் இலக்கியங்கள் படைக்கப்படுகின்றன. இவற்றுள் மலாய் இலக்கியம் தேசிய இலக்கியமாக விளங்குகிறது. இதர மொழிகளில் படைக்கப்படும் இலக்கியங்கள் குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் படைப்பாகவே பார்க்கப்படுகின்றன. இன்று வரையிலும் தமிழ் மற்றும் சீன எழுத்தாளர்கள் தங்களது படைப்பிலக்கியங்களைத் தேசிய இலக்கியமாக அறிவிக்கக் கோருகின்றனர். அறிவித்தபாடில்லை. இந்நிலையில் சீன இலக்கியத்தில், பரவலாகப் பயன்படுத்தப்பட்ட சொல்லாடல் ‘மலேசிய…

ஷாஹானுன் அமாட் : அதிகாரங்களை நோக்கிய நுண் பார்வையாளர்

pandiyan-3

இலக்கியம் என்பது ஓர் இலக்கை நோக்கமாக வைத்து மொழியின் துணையுடன் இயங்குதல் என்பது பொதுப்படையான விளக்கம்தான். இலக்கியப் படைப்புகள் எழுதப்படும் நோக்கம் என்னவாக இருக்கும் என்பதைக் கணிப்பது அவ்வளவு எளிதன்று. ஒரு செறிவான இலக்கியப் படைப்புக்குள் சூல்கொண்டிருக்கும் மையத்தைத் தொடுவதற்கு வாசகனுக்கு வாசிப்புப் பயிற்சி மிக அவசியமாகிறது. இலக்கிய விமர்சனம் மட்டுமே இப்பணியைக் கொஞ்சம் சுலபமாக்கித்…

மசாஜ்

chavutti_movie-1

மசாஜ் நிலையங்களை அறிமுகம் செய்து வைத்தவன் திருநாவுக்கரசன்தான். கெடாவின் ஒரு கம்பத்திலிருந்து கோலாலம்பூருக்குப் பிழைப்புத்தேடிவந்த புதிதில் அறிமுகமானவன். வாடிக்கையாளனாகத்தான் டாக்சியில் ஏறினேன். என் நிலை புரிந்து சில மாதங்களில் என்னையும் டாக்சி ஓட்டவைத்து தொழில் நுணுக்கங்களைச் சொல்லிக்கொடுத்தான். நகர நெரிசலில் புகுந்து ஓடவேண்டிய குறுக்கு வழிகளைக் காண்பித்தான். டாக்சியை ஓட்டி அலையும்போது கோலாலம்பூர் முழுவதும் பரவலாக…

கயிறு

kayiru-1

பிரான்சிஸ் வீட்டுக்கு போகாமலே இருந்திருக்கலாம். போனாலும் பார்த்தோமா, வந்தோமா என்றிருந்திருக்க வேண்டும். செய்யாதது பெரும் பிழை. நினைக்க நினைக்க அவமானம் ஒரு துர்நாற்றம் போல எரிச்சல் படுத்திக் கொண்டிருக்க, வண்டியை வேகமாய் உறும விட்டேன். கோயிலுக்கு நேரமாகிவிட்டது. இன்னேரம் பூசை தொடங்கியிருக்கும் என்பது இன்னும் பதட்டத்தை அதிகரித்தது. இவ்வளவு தாமதமாக ஒரு நாளும் போனதில்லை. கோயில்…

எம்.ஏ இளஞ்செல்வன் என்னும் கை தேர்ந்த கதை சொல்லி

elan

என் இடைநிலைக் கல்வியை முடித்துவிட்டு வேலைக்காக அலைந்து கொண்டிருந்தேன். நெடுநாட்கள் அலைந்து அலைந்து பலனற்றுச் சோர்ந்து போயிருந்தேன். என்னோடு படித்தவர்கள் என் கண் முன்னாலேயே வேலைக்காகி கை நிறைய சம்பளம் பெறுவதைப் பார்க்கும்போது மனம் விம்மியது. புத்தம் புதிய ஆடைகள் உடுத்தி, பெருமையோடும் மிடுக்கோடும் அவர்கள் வேலைக்குச் செல்வதைப்  பார்க்கும்போது பொறுமினேன். வீட்டில் வெட்டியாக இருப்பதைப்…

இரட்சிப்பு

mahathman-1

ஏழாவது முறையாக சிறையிலிருந்து விடுதலையாகிறேன். கடந்த ஆறுமுறையிலும் எங்கு போவது என்ற போக்கிடம் தெரியாமலிருந்தேன். இந்தமுறை கொஞ்சம் ஞானம் வந்ததுபோல அடங்கியிருப்போம் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். நானாகத் தேடிக்கொண்டதும் சிக்கிக்கொண்டதும் மூன்றுமுறை. அதிரடிச்சோதனைக்கு ஏதாவதொரு பெயரிட்டு கிடப்பில் கிடந்த ஏதாவதொதொரு கோப்புக்குப் பலியானது மீதி. தைப்பிங் சிறை, தாப்பா சிறை, புடு சிறை, சுங்கை பூலோ…

பிரமிளின் ஒரு கவிதை: சிற்றாய்வு

piramil-1

“இன்றைய தமிழ்க்கவிதையின் முன்னோடி பிரமிள் தான். தத்துவச் சிக்கல்களைத் தீர்த்துக்கொண்டு, மரபையும், நவீனத்துவத்தையும் செரித்து முன்னோக்கிப் பாய்ந்தவர் பிரமிள்” என்று தேவதேவன் ஒரு நேர்காணலில் பிரமிள் பற்றிக் கூறியிருந்தார். அவரது கூற்று நியாயமானது என்று பிரமிளின் படைப்புலகமே பறைசாற்றும். பிரமிள் பற்றிய முன்னுரைகள் இல்லாமலே அவரது கவிதை மீதான சிற்றாய்வைப் பரிசோதித்து விடலாம். காவியம் என்ற…

திறவுகோல் 4: வானத்து வேலிகள்

nila-2

மறைந்த மலேசிய எழுத்தாளர் முனைவர் ரெ.கார்த்திகேசுவால் எழுதப்பட்டுள்ளது இந்நூல். திரு.ரெ.கார்த்திகேசுவை ஒருமுறைதான் நான் சந்தித்திருக்கிறேன். அதுதான் முதலும் கடைசியுமான சந்திப்பு. 2015-ஆம் ஆண்டு, நண்பர் ஷாநவாஸிற்கு கரிகாற்சோழன் விருது வழங்கப்பட்ட நிகழ்வில் கலந்துகொள்ள கோலாலம்பூர் சென்றிருந்தபோது அவரைப் பார்த்தேன். என்னை அறிமுகம் செய்து கொண்டவுடன், அவர் கனிவான குரலில் உங்கள் கதைகளைப் படித்திருக்கிறேன் என்று கூறி…

பிறக்கவிருப்பவள்

k-satchidanandan

வனம் என்னை அழைத்தது ஆயிரம் பூக்களின் நறுமணங்களுடன்   எனது குருதிநாளங்களில் இப்பொழுதுமுண்டு யட்சிகளினுடையதைப்போன்ற அருவிகளின் பெருஞ்சிரிப்பு   எனது இளமையை இவ்வனங்களுக்கும் எனது இதயத்தை அநாதரவாகித் துயருறுவோரின் வேதனைகளுக்கும் கையளித்தேன்   எனது கால்களில் இப்பொழுதுமுண்டு குன்றுகளில் ஓடித்திரிந்த கொலுசுகள் அணிந்திராத சிறுபருவம் எனது தலைக்குள் ஓடைகளில் குதித்தாடிய காதலற்ற இளம்பருவம்   இந்த…